மே 7, 2021, 3:16 காலை வெள்ளிக்கிழமை
More

  இதை பதிவிறக்கம் செய்யாதீங்க! ஆப் குறித்து ஒரு எச்சரிக்கை!

  cell phone 5
  cell phone

  இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தடுப்பூசியை வழங்குவதற்கு வசதியாக மத்திய அரசு கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை உருவாக்கி உள்ளது.

  இந்த தளமானது தடுப்பூசி வழங்கும் செயல்முறையை நெறிப்படுத்துவதற்கும், தடுப்பூசி பெற இந்த செயலியின் மூலம் பதிவு செய்யவும் உதவுகிறது.

  இருப்பினும் கூகுள் பிளே ஸ்டோரில் இது போன்ற பல செயலிகள் உள்ளன. எனவே எந்த செயலிகளையம் இப்போது பதிவிறக்கம் செய்ய வேண்டாம். கோவின் எனப்படும் செயலி பிளே ஸ்டோரில் இருந்தாலும், அதிகாரப்பூர்வ செயலி இன்னும் வெளியிடப்படவில்லை.

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழிமுறைகளுக்காக மத்திய அரசு கோவின் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி தற்போது அதன் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கூகுள் பிளே அல்லது ஆப் ஸ்டோரில் இந்த செயலி இல்லை .

  ப்ளே ஸ்டோரில் குறைந்தது 3 செயலிகள் கோவின் என்ற பெயரில் உள்ளது. இவற்றில் பல செயலிகளை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். ப்ளூடூத் மற்றும் வைபை தயாரிக்கப்பட்ட இந்த செயலிகளை தடுப்பூசிக்கான கோவின் செயலி என்று நினைத்து பதிவிறக்கம் செய்யப்படுகின்றன. அதனால் அங்கு தடுப்பூசி செயல்முறை குறித்து எந்த தகவலும் அவர்களுக்குக் கிடைக்காது.

  இதுகுறித்து சைபர் நிபுணர் அனுஜ் அவர்கள் கூறுகையில் ,இந்த வகை செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஏனெனில் தரவை தவறாக பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளது என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,156FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »