May 14, 2021, 3:56 am Friday
More

  தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை நிரூபித்த உதயநிதி: சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு டிடிவி கண்டனம்!

  உதயநிதியின் உற்சாகமான சர்ச்சைப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

  udayanidhi-in-karur
  udayanidhi-in-karur file picture

  முன்னாள் திமுக., தலைவர் கருணாநிதியின் பேரனும், இந்நாள் திமுக., தலைவர் ஸ்டாலினின் மகனும், தற்போதைய திமுக., இளைஞரணிச் செயலாளரும் ஆன உதயநிதியின் சசிகலா குறித்த சர்ச்சைக்குரிய விமர்சனப் பேச்சுக்காக அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்.எல்.ஏ.,டிடிவி தினகரன்.

  அவர் இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது…

  பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார்.

  கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி. நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும்.

  தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி! பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

  உதயநிதியின் பேச்சுக்கு அவரது தாயார் துர்கா தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

  இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார் பாஜக., தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன்.

  அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

  அன்று தாத்தா டி.என்.அனந்த நாயகியிலிருந்து ஆரம்பித்து வைத்ததை பேரன் @Udhaystalin தொடர்ந்து கொண்டுள்ளார்.
  @arivalayam சிந்திக்கின்ற பாரம்பர்யமே பெண்களை கேவலப்படுத்துவதாகவே உள்ளது. தலைவர்களே இதை முன்னெடுக்கும் போது தொண்டர்கள் பூங்கோதையை அவமானப் படுத்துவதில் துவங்கி சக பெண் நிர்வாகிகளின் இடுப்பை கிள்ளுவது வரை சாதாரணமாக கடந்து போகிறார்கள்.

  எதிர்வினையாக ராசாத்தி அம்மா துவங்கி கனிமொழி, கிருத்திகா வரை பெண்களே இலக்காகிறார்கள். பெண்களை அரசியலுக்கு வரவிடாமல் இம்மாதிரி விமர்சனங்கள் வாயிலாக இரும்பு அரணை எழுப்புகிறார்கள்.

  தன் அம்மா வயதிலிருக்கும் சசிகலாவை @Udhaystalin விமர்சனம் செய்கின்ற விதம் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கப்பட வேண்டியது. இதை @mkstalin அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. Smt. துர்கா ஸ்டாலின் அவர்களே! செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் வானதி சீனிவாசன்.

  உதயநிதியின் உற்சாகமான சர்ச்சைப் பேச்சு இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

  அண்மையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்பதை சர்ச்சைக்குரிய விதத்தில் கூறி பேசிய கருத்துகள் அதிமுக.,வினரிடையே கடுங் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,242FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,185FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »