
மதுரையில் பா.ஜ.க., சார்பில் மகளிர் அணி நடத்திய நம்ம ஊர் பொங்கல் விழா நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் கே.கே.ஸ்ரீநிவாசன், தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இராம. ஸ்ரீநிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர் ஆகியோர் தலந்து கொண்டு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சியை நடத்தினர்.
பாஜக வர்த்தக பிரிவு மாநில செயலாளர் மகாதேவன், மாவட்ட துணை தலைவர் ஹரிஹரன், பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, மதுரை அருகே தெப்பக்குளத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் பொங்கல் விழாவை தொடங்கி வைத்து பேசினார், நடிகையும் பாஜக., செய்தி தொடர்பாளருமான குஷ்பூ சுந்தர். பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன், மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.