ஏப்ரல் 21, 2021, 6:51 மணி புதன்கிழமை
More

  பைபிள் படித்த வரை இனித்தது… உண்மை உரைத்த போது கசந்தது! நாயுடு Vs கிறிஸ்துவர்கள்!

  கிறிஸ்தவர்களை அவமதித்து பேசுவதும் அவர்கள் மீது அவதூறுகளை வீசுவதும்… இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று

  christian-cell-against-naidu
  christian-cell-against-naidu
  • சந்திரபாபு நாயுடு மீது தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்டியன் செல் ஆத்திரம்.
  • விசாகப்பட்டினத்தில் கிறிஸ்தவர்களின் போராட்டம்.
  • எதிர்கால திட்டம் குறித்து இன்று கூட்டம்.
  • மாநிலத்தில் பல இடங்களில் எதிர்ப்பு போராட்டங்கள்.

  கிறிஸ்தவர்கள் மீது கடினமாக குற்றம்சாட்டிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு மீது பல கிறிஸ்தவ சங்கங்களோடு கூட அந்தக் கட்சியின் கிறிஸ்டியன் செல் கூட ஆத்திரத்தில் உள்ளது. அரசியலுக்காக, இதுவரை இருந்தாற் போலிருந்து திடீரென்று யூ டர்ன் எடுத்து கிறிஸ்தவர்களை அவமதித்து பேசுவதும் அவர்கள் மீது அவதூறுகளை வீசுவதும்… இதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் கிறிஸ்டியன் தலைவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்!

  தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பிலிப் அந்த கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். அவருடைய வழியிலேயே டிடிபி கிறிஸ்டியன் பிரிவு பயணிப்பதற்கு தயாராகி வருகிறது.

  இந்த அம்சம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கிறிஸ்தவர்கள் செவ்வாயன்று விஜயவாடாவில் கூட்டம் கூடினர். மாநில கிறிஸ்தவ தலைமையோடு கூட அனைத்து மாவட்டங்களின் தலைவர்கள் காரியதரிசிகள் முக்கிய தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கு பெற்றார்கள்.

  christians-aginst-naidu
  christians-aginst-naidu

  சந்திரபாபுவின் நடவடிக்கையை அடக்க வேண்டும் என்றும் எல்லாரும் ஒரேடியாக கூட்டமாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பதாக தெரிகிறது.

  சந்திரபாபு கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்… வெறும் தன் அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு தம்முடைய மதம் மீது அனாவசிய விமர்சனங்கள் செய்து மதங்களிடையே வேற்றுமைகளை ஏற்படுத்துகிறார் என்று ஆல் இந்தியா கிரிஸ்டியன் கவுன்ஸில் மாநிலத் தலைவர், ஏபி கிரிஸ்டியன் லீடர்ஸ் ஃபோரம் தலைவர் ரெவரண்ட் அத்தேபல்லி ரவிபாபு கூறினார்.

  சந்திரபாபுவின் விமர்சனங்களை எதிர்த்து விசாகாவில் உள்ள (ஜிவிஎம்சி) காந்தி சிலை அருகில் கிறிஸ்தவர்கள் மிகப்பெரும் அளவில் போராட்டம் நடத்தினார்கள். சந்திரபாபு உடனடியாக கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஃபோரம் மாநில சேர்மன் ஆலிவர் ராய், ரெவ. வில்சன் பாபு, ரெவ.பில்லி கிரகாம் மற்றும் பலர் பங்கு கொண்டனர்.

  மத சமரசம் கொண்ட ஆந்திர மாநிலத்தில் மத வேற்றுமைகளை தூண்டும் விதமாக நடந்து கொள்ளும் சந்திரபாபுவை மாநிலத்தில் காலடி வைக்க விட கூடாதென்று கிறிஸ்தவ சங்கங்கள் ஆத்திரமடைந்தன.

  விஜயவாடாவில் திங்களன்று ஏபி பாஸ்டர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் தலைமையில் நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் இந்தியன் கிரிஸ்டியன்ஸ் தேசிய தலைவர் பெரிகே வரப்பிரசாத ராவு உரையாற்றினார்.

  அரசியலில் நாட்களைக் கடத்துவதற்காக சந்திரபாபு மத அரசியல் செய்கிறார் என்று ஆத்திரமடைந்தார். அசோசியேஷன் கன்வீனர் ரெவ. தயானந்தம், தலைவர் ரவிகரண் மற்றும் பலர் பங்கு கொண்டார்கள்.

  எதிர்காலத்தில் சந்திரபாபு ஏபியில் தனியாளாக மாறப் போகிறார் என்று அசோஷியேஷன் ஆஃ இன்டெகிரேடட் கிரிஸ்டியன் கவுன்ஸில் தேசியத்தலைவர் லிங்கம் ஜான்பென்னி குறிப்பிட்டார். சந்திரபாபு ஒரு மத வெறியராக மாறி விட்டார் என்று குட்லவல்லெரு மண்டலத்தில் பாஸ்டர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »