Home உள்ளூர் செய்திகள் மனைவியை வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்து! 22 வயதில் 11 திருமணம் புரிந்த கணவனின்...

மனைவியை வீடியோ எடுத்து மிரட்டி நண்பர்களுக்கு விருந்து! 22 வயதில் 11 திருமணம் புரிந்த கணவனின் கொடூரம்!

ganesh

22 வயதில் 11 திருமணம் செய்து பெண்களை ஏமாற்றி ஆபாச படம் எடுத்து மிரட்டி தனது நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் முகநூல் மூலம் கணேஷ் என்ற நபரை காதலித்துள்ளார். இருவருக்கு முகநூலில் காதல் மலர, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய பெண், ஆளே இல்லாத பகுதியில் கணேஷ் அந்த பெண்ணிற்கு தாலி கட்டினபார்.

இந்த நிலையில் பெண்ணை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய போது, கணேசுடன் வாழ் விருப்பம் என பெண் தெரிவித்ததால் இருவரும் மேஜர் என்பதால் போலீசார் பெண்ணை கணேசுடன் அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வில்லிவாக்கம் பகுதியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்திய போது, அன்றிரவே 17 வயது சிறுமியுடன் வந்த கணேஷ், வீட்டு வேலைக்காக இந்த சிறுமியை வைத்துக்கொள்ளலாம் என கூறி அந்த சிறுமியிடம் தகாத தொடர்பில் இருந்துள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், கணேசிடம் கேட்டதற்கு அவரை அடித்து அடைத்து சித்ரவதை செய்து, வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளான். மேலும் மது அருந்திவிட்டு புது மனைவியின் கைகளை கட்டியும், வாயை பொத்தியும் நாசம் செய்துள்ளான்.

கொடுமை தாங்க முடியாத புது மனைவி, தான் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து சமாதானப்படுத்துவது போல நடித்து தனது நண்பர்களை வரவழைத்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டுள்ளான்.

இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளரிடம் உதவி கேட்ட இளம்பெண், அங்கிருந்து தப்பி வந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவனை கைது செய்த போலீஸ், இது போல 11 பெண்களை திருமணம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதும் ஒப்புக்கொண்டுள்ளான்.

ஏற்கனவே கன்னியாகுமரியை சேர்ந்த காசி என்பவன் பல பெண்களை ஏமாற்றி தற்போது கம்பி எண்ணி வரும் நிலையில், வெறும் 22 வயதில் 11 திருமணம் செய்துள்ள காமக்கொடூரனின் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version