நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் இலவச பயிற்சி முகாம்
அரையாண்டு விடுமுறையினை பயன் உள்ள வகையில் களிக்கவும் மாணவ-மாணவிகளின் திறனை மேம்படுத்தவும் நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் கைவினை கலைஞர்கள் மற்றும் கைத்தொழில் செய்வோர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் கலைகள் பயிற்சி முகாம் அரசு அருங்காட்சியகத்தில் 26/12/2017 அன்று காலை 10.00 மணிக்கு துவங்கப்பட உள்ளது. 26/12/2017, 27/12/2017 மற்றும் 28/12/201 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும். 3 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் இப்பயிற்சியில் கலந்துக் கொள்ளலாம். பயிற்சியி;ல் காதிதத்தில் கலைபொருட்கள்(PAPER ART), வீணான பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் ART FROM WASTE) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. பயிற்சிக்கு தேவையான பொருட்களை மாணவர்களே கொண்டு வருதல் வேண்டும் . மேலும் விபரங்களுக்கு அரசு அருங்காட்சியகத்தை 04622561915 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி அவர்கள் தெரிவித்தார்.