பிப்ரவரி 25, 2021, 5:38 காலை வியாழக்கிழமை
More

  செல் போனில் மாஸ்டர் படம் பாரு.. ஆபாச படம் காட்டி சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை!

  Home சற்றுமுன் செல் போனில் மாஸ்டர் படம் பாரு.. ஆபாச படம் காட்டி சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை!

  செல் போனில் மாஸ்டர் படம் பாரு.. ஆபாச படம் காட்டி சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை!

  vankodumai
  vankodumai

  சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மகளை மட்டும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு தனது மனைவியுடன் மாஸ்டர் படம் பார்க்க சென்று உள்ளார்.

  இதனால் அந்த சிறுமி தன்னால் மாஸ்டர் படம் பார்க்க முடியவில்லையே என்று சோகத்தில் இருந்து உள்ளார். அப்போது அந்த சிறுமிக்கு வினோத் என்கிற இளைஞர் ஒருவர் போன் செய்தபோது அவரிடம் இந்த சிறுமி தன்னால் மாஸ்டர் படம் பார்க்க முடியவில்லை என்று புலம்பி உள்ளார்.

  அதற்கு அந்த இளைஞர் தனது செல்போனில் மாஸ்டர் படம் இருப்பதாகவும் தன்னுடன் வந்தால் இருவரும் போனில் படம் பார்க்கலாம் என்றும் கூறி அந்த இளைஞர் தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து உள்ளார். இதை நம்பி அந்த சிறுமியும் அந்த இளைஞரின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞர் சிறுமிக்கு செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.

  அதன் பிறகு சிறுமி தனது வீட்டிற்கு சென்றவுடன் வீட்டில் இருந்த தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக இதுகுறித்து திருமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்து உள்ளனர். இதனை அடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர்.