Home உள்ளூர் செய்திகள் கோடி வசூல்.. வியாபார தந்திரமா? காற்றாடிய தியேட்டரால் ரத்தான மாஸ்டர் திரைப்படம்!

கோடி வசூல்.. வியாபார தந்திரமா? காற்றாடிய தியேட்டரால் ரத்தான மாஸ்டர் திரைப்படம்!

master2
master2

சென்னையின் முக்கிய திரையரங்கு ஒன்றில் மாஸ்டர் படத்திற்கு இன்று மதியம் 12 மணி காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட புக் ஆகவில்லை என்பதால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளி வந்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூலித்தது என்றும், ரூ 200 கோடி வசூலித்தது எனவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய திரையரங்கு ஒன்றில் மாஸ்டர் படத்தின் 12 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த காட்சிக்கு ஒரு டிக்கெட் கூட ஆன்லைனில் புக் செய்யப்படவில்லை என்பதால் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது

மாஸ்டர் படத்தின் வசூல் கோடிக்கணக்கில் என ஒரு பக்கம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னணி திரையரங்கிலேயே ஒரு டிக்கெட் கூட விற்பனையாகாமல் ஷோ கேன்சல் ஆகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version