Home அடடே... அப்படியா? மரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்!

மரணித்த பெண் உயிர்த்தெழுந்த அதிசயம்!

keethi
keethi

உயிரிழந்தவர் மீண்டு வந்தார் என்றால் நீங்கள் நம்புவீர்களா? அப்படியான சம்பவம் உண்மையாகவே அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் கேத்தி பேடன் என்பவர் கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவருக்கு போன் அழைப்பு வந்துள்ளது.

அதில், உங்களது மகள் பிரசவ வலியில் துடிப்பதாகவும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளனர். உடனடியாக மருத்துவமனை விரைந்த கேத்தி பேடனுக்கு அதிக பதற்றம் மற்றும் பயம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கேத்தியை எமெர்ஜென்சி சிகிச்சையில் மருத்துவர்கள் அனுமதித்துள்ளனர். அவருக்கு துரித மருத்துவம் நடந்துள்ளது. ஆனால் வேகமாக சோர்வடைந்த கேத்தியின் உடல்நிலை சற்று நேரத்தில் அமைதியானது.

அவர் ரத்த அழுத்தம் முழுவதும் குறைந்துள்ளது. இதனால் அவர் மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ ரீதியாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதேவேளையில் பிரசவ வலியில் சேர்க்கப்பட்ட கேத்தியின் மகளுக்கு வெற்றிகரமாக பிரவமும் நடந்தது. அந்த நேரத்தில் தான் மருத்துவ அதிசயம் நடந்துள்ளது. இறந்துவிட்டதாக கூறப்பட்ட கேத்தியின் ஆக்சிஜன் லெவல் திடீரென அதிகரித்து மீண்டும் உயிர் பிழைத்தார். இந்த அதிசயத்தால் மருத்துவர்களே ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இது குறித்து பேசிய கேத்தி, ” இது எனது வாழ்க்கையின் இரண்டாவது வாய்ப்பு. எல்லா வகையிலுமே நான் ஸ்பெஷலான ஒரு பெண். இனி வரும் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வாழ்வேன். இது என் புது வாழ்வு என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய அம்மா உயிர் பிழைத்து வந்தது குறித்து, ”இது என்னுடைய அம்மாவின் நல்ல விதி. அவர் இப்போது என்னுடன் இருக்கிறார் என்பது எழுதப்பட்டதாகவே நினைக்கிறேன். இது அதிசயமின்றி வேறொன்றுமில்லை என்றார்.

தற்போது கேத்தியும், அவரது மகள் மற்றும் பிறந்த குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
கேத்தியின் சம்பவம் அமெரிக்க இணைய உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் வாழ்க்கையை தொடங்கியுள்ள கேத்திக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version