Home சற்றுமுன் CCPA விடுத்த எச்சரிக்கை! மீறினால் சிறை தண்டனை!

CCPA விடுத்த எச்சரிக்கை! மீறினால் சிறை தண்டனை!

advertisement
advertisement

விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் விளம்பரங்கள் செய்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என CCPA எச்சரிக்கை.

விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் கொரோனாவிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதில் தயாரிப்புகளின் செயல்திறனைக் கோரும் விளம்பரதாரர்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, இதுகுறித்து மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) கூறுகையில், தற்போதைய கொரோனா தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொண்டு தயாரிப்புகளுக்காக நுகர்வோரை தவறாக வழிநடத்த தவறான விளம்பரங்கள் கூறப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்க தவறான நியாயமற்ற வர்த்தக நடைமுறையாக கையாளுகிறார்கள்.

இதையயடுத்து தற்போது விளம்பரங்கள் அதிகரித்துள்ளது அதுவும் குறிப்பாக உணவுப் பொருட்கள் தொடர்பானவை ஆகும். இதை சாப்பிட்டால் 100% அல்லது 99.9% கிருமிகளைக் கொல்லும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. கடந்த 2020 ஜனவரி மற்றும் ஜூலை மாதத்திற்கு இடையில், கை சுத்திகரிப்பாளர்களுக்கான தொலைக்காட்சி விளம்பரம் கிட்டத்தட்ட 100% அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த விளம்பர அளவிலிருந்து, தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் சுகாதார தயாரிப்புகளுக்காக 20% தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாகியுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், அத்தகைய விஞ்ஞான ஆதாரங்கள் இல்லாமல் (scientific proof) தவறான விளம்பரங்கள் செய்தால் விளம்பரதாரர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று CCPA எச்சரிக்கை விடுத்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version