தென் மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு:
மதுரை
தென் தமிழகத்திலிருந்து வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
கொ
ரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
சில சிறப்பு ரயில்கள் ஜனவரி மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது , அந்த ரயில்களின் சேவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் – மும்பை சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 28.03.2021 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை – நாகர்கோவில் சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 29.03.2021வரையும் நீட்டிக்கப்படுகிறது.
வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06053 மதுரை – பிகானீர் வாராந்திர சிறப்பு ரயில் 04.02.2021 முதல் 25.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பிகானீரிலிருந்து புறப்படும் வண்டி எண் 06054 பிகானீர் – மதுரை வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் – ஓகா வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 06734 ஓகா – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 09.02.2021 முதல் 30.03.2021 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி – மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் 03.02.2021 முதல் 31.03.2021 வரையும் வியாழக்கிழமை மும்பை தாதரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06071 தாதர் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 11.02.2021 முதல் 01.04.2021 வரையும், வெள்ளிக்கிழமைகளில் புவனேஸ்வரில் இருந்து புறப்படும் வண்டி எண் 08496 புவனேஸ்வர் – ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் 05.02.2021 முதல் 26.03.2021 வரையும் மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 08495 ராமேஸ்வரம் – புவனேஸ்வர் வாராந்திர சிறப்பு ரயில் 07.02.2021 முதல் 28.03.2021 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது, நடைபெற்று வருகிறது என , தென்னக ரயில்வேயின் செய்திக்குறிப்பு கூறுகிறது.