செங்கோட்டை: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கோவிலில் புண்யாகவாசனம்- தூய்மைப் பணி நிறைவேற்றப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை செய்யப்பட்டது. புதன்கிழமை இன்று காலை 5.30 மணி அளவில் மீண்டும் கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.40க்கு கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இந்தத் திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
பங்குனி உத்திர திருவிழா: சபரிமலையில் கொடியேற்றத்துடன் தொடக்கம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari