spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

- Advertisement -
fake-sms-1
fake sms 1

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்க வாய்ப்பு வந்துள்ளது என்றெல்லாம் கூறி நமது விவரங்களைக் கேட்பார்கள்.

பெரும்பாலும் வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறியே இந்த மாதிரியான தவறான அழைப்புகளும் எஸ்எம்எஸ்களும் வரும். இதுபோன்ற மாய வலையில் சிக்கி கோடிக் கணக்கில் ஏமாந்தவர்களும் உண்டு.

நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கிகள் நமக்கு நேரடியாக போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்

மூலமாகவோ நமது விவரங்களைக் கேட்பதில்லை. அவ்வாறு வரும் அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்களும் மோசடியானவைதான் என்று வங்கிகளே தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வருகின்றன.

fake-sms
fake sms

ஆனாலும் இதுகுறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே உள்ளது. இந்த லிங்க்கை கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என்றெல்லாம் எஸ்எம்எஸ் வரும். அதை கிளிக் செய்தால் உங்களது தனிநபர் தகவல்கள் திருடப்பட்டு, பண மோசடி நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், வங்கிகள் அனுப்புவதாகக் கூறி மொபைல் நம்பருக்கு வரும் எஸ்எம்எஸ்கள் குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி மூன்று ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

  1. Your KYC has been modified successfully. You are also eligible to earn a cashback of Rs 1,300. Claim for your cashback at, http://311agtr
  • இந்த விஷயத்தில் ஐசிஐசிஐ கூறுவது யாதெனில், இதுபோல கேஒய்சி நடைமுறையில் கேஷ் பேக் ஆஃபர்கள் எதையும் வங்கிகள் வழங்குவதில்லை. எனவே இதில் ஏமாற வேண்டாம் என்று ஐசிஐசிஐ வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
  1. Congratulations, your account has been credited with Rs 3,30,000. To process it, please fill in your particulars at http://i2urewards.cc/33
  • எந்தவொரு வங்கியோ நிறுவனமோ இவ்வளவு பெரிய தொகையை இலவசமாக வழங்குவதில்லை. அதேபோல, மேலே உள்ள லிங்க்கை பார்க்கும்போதே அது சரியானது இல்லை என்று தெரிகிறது. எனவே இதுபோன்ற எஸ்எம்எஸ்களை நம்ப வேண்டாம் என்கிறது ஐசிஐசிஐ வங்கி.
  1. Your IT Refund has already been started. That’s the last day to assert it. Please visit http://itr.trn./toref
  • இந்த விஷயத்தில் அனுப்பப்பட்ட செய்தியின் ஐடி [email protected] என்று இருந்தது. இந்த ஐடி சரியானதாகத் தெரியவில்லை. அது தெரியாமல் லிங்க்கை கிளிக் செய்து உள்ளே சென்றால் தகவல் திருட்டு மற்றும் பண மோசடிகள் நடைபெறும் அபாயம் உள்ளது.
fake-sms2
fake sms2

இதுபோல, வங்கிகள் தரப்பிலிருந்து வரும் குறுஞ்செய்திகளை வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் பார்த்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் எஸ்பிஐ வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe