நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது தமிழக அரசு.
விவசாயிகள் நலன் கருதி ஊக்கத்தொகையாக குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.70, பொது ரகத்திற்கு ரூ.50ம் கூடுதலாக வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு சன்னரகத்திற்கு ரூ.1660, பொது ரகத்திற்கு ரூ.1600 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
1,564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து, 20 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டம் இடப்பட்டுள்ளது. மேலும், சென்னை, நீலகிரி தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.