சென்னை: நிலம் கையகப் படுத்தல் தொடர்பில், தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:– மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் விடுத்த அறிக்கையில், உடன்குடி மின் திட்டத்தில், “குறையுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக்கொள்வதற்கு சட்டத்தில் வழியில்லை. மேலும் குறையுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை ஏற்றுக்கொண்டால், பணி கிடைக்காதவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணைப் பெற்று இந்த திட்டமே முடங்கிவிட ஏதுவாகும்” என்றெல்லாம் கூறியிருந்தாரே?. பதில்:– நீதிமன்றத்திற்கு பிரச்சினை சென்று விடக்கூடும் என்பதால்தான் அந்த திட்டத்தின் டெண்டரையே ரத்து செய்ததாக மின்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். தற்போது டெண்டர் கிடைக்காதவர், இந்த அரசை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறாரே, அதற்கு அமைச்சர் என்ன கூறுவார்?. அதனால்தான் நான் என்னுடைய பதிலில் “குறையுள்ள டெண்டர் என்றால், உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டியதுதானே, 2 ஆண்டு காலம் அதை வைத்திருந்து விட்டு தற்போது ரத்து செய்தது எதற்காக?” என்று கேட்டிருந்தேன். அமைச்சர் தரப்பில் தவறு இல்லை என்றால், நான் என்னுடைய முதல் அறிக்கையில் கேட்டவாறு விசாரணை கமிஷனை அமைத்திருந்தால், உண்மை ஊருக்கு தெரிந்திருக்கும். வழக்கும் வந்திருக்காது அல்லவா?. தற்போது சீன நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில், இந்த திட்டப்பணிகளுக்காக 5 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ஒப்பந்தப்புள்ளியில் தாங்கள்தான் குறைவான தொகையை குறிப்பிட்டிருந்ததாகவும், அனைத்து தகுதிகளும் இருந்ததாகவும், ஆனால் ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். தற்போது டெண்டரை ரத்து செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேள்வி:– முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிலம் கையகப்படுத்தும் திருத்த மசோதாவை அதிமுக அரசு ஆதரித்ததை நியாயப்படுத்தி விடுத்த அறிக்கையில், தனியாருக்காக தமிழகத்தில் எந்த பகுதி விவசாய நிலத்தையும் கையகப்படுத்தவில்லை என்று தெரிவித்திருக்கிறாரே?. பதில்:– ஜெயலலிதாவின் அறிக்கையைப் பார்த்து விட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் டி.செங்குட்டுவன், தமிழக அரசின், தொழில் துறை சார்பில் 27–5–2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணை எண். 51 ன் நகல் ஒன்றினை எனக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில், இந்த சிப்காட் வளாகத்திற்குள் தொடங்கப்படும் தொழில்களில் பெரும்பாலானவை தனியாரால் தொடங்கப்படும் தொழில்கள்தான். எனவே தனியாருக்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை முற்றிலும் தவறானது என்பதற்கு இந்த அரசாணையும் தக்க சான்றாகும்.
நிலம் கையகப்படுத்தல் தொடர்பில் ஜெயலலிதா விடுத்த அறிக்கை தவறு: கருணாநிதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week