பிப்ரவரி 25, 2021, 12:35 மணி வியாழக்கிழமை
More

  ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகை! டிரைவரின் பொறுப்புணர்வுக்கு குவியும் பாராட்டு!

  Home சற்றுமுன் ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகை! டிரைவரின் பொறுப்புணர்வுக்கு குவியும் பாராட்டு!

  ஆட்டோவில் தவறவிட்ட 50 பவுன் நகை! டிரைவரின் பொறுப்புணர்வுக்கு குவியும் பாராட்டு!

  auto-driver-3
  auto-driver-3

  ஆட்டோவில் தவற விட்ட 50 பவுன் நகையை நேர்மையாக காவல்துறையில் ஒப்படைத்த டிரைவரை போலீசார் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

  சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பால் பிரைட் என்பவர். கடந்த ஜனவரி 27-ம் தேதி இவரது மகனுக்கு குரோம்பேட்டையில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு பால் பிரைட் வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று உள்ளார். அப்போது அவரது பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை ஆட்டோவில் தவறவிட்டார்.

  வீட்டிற்கு சென்ற பால் பிரைட் பையில் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆட்டோவில் தவற விட்டதை உணர்ந்த அவர் உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் போலீசார் அவர் சென்ற ஆட்டோவை தேடி சென்றனர்.

  ஆட்டோ டிரைவர் சரவணகுமார் ஆட்டோவில் நகைப்பை ஒன்று இருப்பதை கண்டறிந்த பின் அதனை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.50 பவுன் நகையை நேர்மையாக கொண்டு வந்து கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை பாராட்டி குரோம்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் வெகுமதி அளித்தனர். அப்பகுதி மக்களும் அவரை பாராட்டி வாழ்த்தினர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari