பிப்ரவரி 25, 2021, 4:35 காலை வியாழக்கிழமை
More

  சட்டப்பேரவையில் ‘அந்த’ மாதிரி படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!

  Home சற்றுமுன் சட்டப்பேரவையில் 'அந்த' மாதிரி படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!

  சட்டப்பேரவையில் ‘அந்த’ மாதிரி படம் பார்த்த காங்கிரஸ் உறுப்பினர்!

  prakash-Rathore
  prakash-Rathore

  கர்நாடக சட்ட மேலவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் ரத்தோட் ஆபாச படம் பார்த்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. அவர் மொபைலில் ஆபாச வீடியோ பார்த்த வீடியோவை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பிரகாஷின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் ஆபாச வீடியோ பார்க்கவில்லை எனவும், மொபைலில் ‘தேவையில்லாத’ புகைப்படங்களையும் காணொலிகளையும் நீக்கிக் கொண்டிருந்தேன் என நைஷாக மழுப்பியிருக்கிறார். “நான் பொதுவாக அவைக்குள் மொபைல் எடுத்துச் செல்ல மாட்டேன்.

  prakash-Rathore-1-1
  prakash-Rathore-1-1

  விவாதங்களில் கேள்விகள் எழுப்புவதற்காக மட்டுமே மொபைல் எடுத்துச் செல்வேன். என்னுடைய மொபைலின் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதால், தேவையற்ற காணொலிகளை நான் நீக்கினேன். எனக்கு ஆபாசம் படம் பார்க்கும் ஆசை கிடையாது. இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க மாட்டேன்” என பிரகாஷ் கூறியிருக்கிறார்.