பிப்ரவரி 25, 2021, 1:30 மணி வியாழக்கிழமை
More

  ஆதரவற்றோர் காப்பகத்தில் பாதிரியார் செய்த செயல்! சாட்சி ஆன பெண் மீது கொலை முயற்சி!

  Home சற்றுமுன் ஆதரவற்றோர் காப்பகத்தில் பாதிரியார் செய்த செயல்! சாட்சி ஆன பெண் மீது கொலை முயற்சி!

  ஆதரவற்றோர் காப்பகத்தில் பாதிரியார் செய்த செயல்! சாட்சி ஆன பெண் மீது கொலை முயற்சி!

  hermins-1
  hermins-1

  உடன் பணிபுரியும் பெண்ணுடன் தனிமையில் இருந்ததை கண்டு விட்ட பெண்ணை கொலை வெறித்தாக்குதல் நடத்திய பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியபுரம் எனும் ஊரில் ஹெர் மைன்ஸ் என ஆதவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதவற்ற சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளனர். இதனை குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார்.

  இந்நிலையில் பாதிரியார் ஜோசப் ஈஸிதோருக்கும் அங்கு பணிபுரியும் ஜெயலட்சுமி என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 25 – ம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசப்பும் ஜெயலட்சுமியும் தனிமையில் இருந்துள்ளனர்.

  relationship-1
  relationship-1

  இதனை அந்த காப்பகத்தில் பல வருடமாக சமையல் வேலை செய்து வரும் ராஜம்மாள் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோசப்பும் ஜெயலட்சுமியும் ராஜம்மாள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  அங்கிருந்து தப்பி ஓடிய ராஜம்மாள் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த ராதாபுரம் எஸ்.ஐ. சிவ பெருமாள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார். ஜெயலட்சுமியுடன் ஜோசப் தனிமையில் இருந்ததைப் பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும், முதிய பெண்களிடமும் பாதிரியார் தகாத செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், தன் வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக்கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

  இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரோஸ்மியபுரம் இளையோர் மற்றும் முதியோர் காப்பாகத்தின் நிர்வாகத்தினை கவனித்து வரும் பாதிரியார் ஜோசப் ஈஸி தோர் மற்றும் ஜெய லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari