பிப்ரவரி 25, 2021, 4:34 காலை வியாழக்கிழமை
More

  தமிழக அரசின் புதிய தலைமை செயலர் தேர்வு!

  Home சற்றுமுன் தமிழக அரசின் புதிய தலைமை செயலர் தேர்வு!

  தமிழக அரசின் புதிய தலைமை செயலர் தேர்வு!

  tamil-nadu-govt-1
  tamil-nadu-govt-1

  தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவியேற்றுக்கொண்டார்.60 வயதை எட்டியதால் கடந்த ஜூலை 31-ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அக்டோபர் 31-ஆம் தேதி வரை 3 மாதங்கள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீண்டும் பணிநீட்டிப்பு ஜனவரி 31-ஆம் தேதி வரை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.

  இந்நிலையில், தலைமைச் செயலாளர் சண்முகம் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். நாளை இவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari