Home இந்தியா தமிழகத்துக்கு அதிரடி திட்டங்கள்; சலுகைகள்: நிதி அமைச்சர் தாராளம்!

தமிழகத்துக்கு அதிரடி திட்டங்கள்; சலுகைகள்: நிதி அமைச்சர் தாராளம்!

images
images

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்:

எதிர்பாராத சூழலுக்கு இடையே மத்திய பட்ஜெட் தயாரிப்பு.

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் அறிவிப்பு.

கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராமல் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.

27.1 லட்சம் கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று ஆத்ம நிர்பர் பாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றி.

இந்தியா நம்பிக்கை நாடாக திகழ்கிறது.

ஆஸி.யில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த வெற்றி, நமது வலிமையை காட்டுகிறது.

உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள்.

தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும்.

மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.

கேரளா, மேற்கு வங்க மாநிலங்களிலும் புதிய சாலை மேம்பாட்டு திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.

கேரளாவில் 1100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ, அஸ்ஸாமில் 1,300 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அகல ரயில் பாதைகள் அனைத்தும் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும்.

கேரளாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 65,000 கோடி நிதி ஒதுக்கீடு.

மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ. 95,000 கோடி நிதி ஒதுக்கீடு.

சென்னை மெட்ரோ – ரூ.63ஆயிரம் கோடி ஒதுக்கீடு:

வீடுகளுக்கு நேரடியாக கேஸ் விநியோகிக்கும் திட்டத்தில் கூடுதலாக 100 மாவட்டங்கள் சேர்க்கப்படும்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மேலும் 1கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும் – நிர்மலா சீதாராமன்.

  • சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி
  • தமிழக சாலை மேம்பாட்டுக்கு ரூ.1.03 லட்சம் கோடி
  • தமிழகத்தில் 3,500 கி.மீ. புதிய சாலை அமைக்கப்படும்: மதுரை டூ கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை
  • மதுரையில் தொழில் வழித்தடம்
  • புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
  • உள்கட்டமைப்புக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிதி
  • கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி கூடுதல் நிதி
  • சுகாதார மேம்பாட்டுக்கு ரூ. 64.180 கோடி ஒதுக்கீடு
  • சுயசார்பு இந்தியா : ரூ.27 லட்சம் கோடிக்கு புதிய திட்டங்கள்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version