பிப்ரவரி 25, 2021, 1:39 மணி வியாழக்கிழமை
More

  உறவிற்கு மறுத்த பெண்! ஆத்திரத்தில் 3 மாத குழந்தையை தீயில் எரிந்த கொடூரன்!

  Home சற்றுமுன் உறவிற்கு மறுத்த பெண்! ஆத்திரத்தில் 3 மாத குழந்தையை தீயில் எரிந்த கொடூரன்!

  உறவிற்கு மறுத்த பெண்! ஆத்திரத்தில் 3 மாத குழந்தையை தீயில் எரிந்த கொடூரன்!

  baby
  baby

  பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள போச்சஹான் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் தன்னுடைய மூன்று மாத குழந்தையுடன் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தார் .

  நடுரோட்டில் தன்னுடைய வீட்டினருகே அந்த பெண் தீ மூட்டி தன்னுடைய மூன்று மாத குழந்தையை இடுப்பில் சுமந்தபடி குளிரில் நடுங்கி கொண்டிருந்தார்.

  vankodumai
  vankodumai

  அப்போது அதே பகுதியை சேந்த ஒரு இளைஞர் அந்த அதிகாலை நேரத்தில் அங்கு வந்தார். அப்போது அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கு அந்த நேரத்தில் ஆள் நடமில்லாததை உணர்ந்த அவர் அந்த பெண்ணிடம் பாலியல் உறவிற்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் அந்த இளைஞர் விடாமல் அந்த பெண்ணிடம் பாலியல் சில்மிஷங்களை தொடர்ந்து செய்தபடி இருந்தார் .

  fire-1
  fire-1

  அதனால் அந்த பெண் கோபமாக அவரிடம் சத்தம் போட்டு கத்தினார். உடேன அந்த இளைஞர் அந்த பெண்ணின் இடுப்பிலிருந்த குழந்தையை வாங்கி அங்கு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தூக்கி வீசினார். அந்த தீயில் விழுந்த அந்த மூன்று மாத குழந்தை அலறி துடித்தது. உடனே அந்த தாய் அருகிலுள்ள பொது மக்களை உதவிக்கு கூப்பிட்ட்டார். உடனே அங்கு வந்த பொது மக்கள் அந்த குழந்தையை தீயிலிருந்து மீட்டார்கள். அந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள்.

  அப்போது அந்த குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் தீயில் அந்த குழந்தையின் கால் கருகியிருப்பதை கண்டு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞரை போலீசார் பிடித்து சிறையிலடைத்தார்கள் .

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari