பிப்ரவரி 25, 2021, 12:32 மணி வியாழக்கிழமை
More

  மீண்டும் உயிர்த்தெழுந்த சிறுமி! அதிர்ச்சியில் உறவினர்கள்!

  Home சற்றுமுன் மீண்டும் உயிர்த்தெழுந்த சிறுமி! அதிர்ச்சியில் உறவினர்கள்!

  மீண்டும் உயிர்த்தெழுந்த சிறுமி! அதிர்ச்சியில் உறவினர்கள்!

  Indonesia-1
  Indonesia-1

  இந்தோனேசியாவில் இறுதி சடங்கின் போது கண்விழித்த சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  இந்தோனேஷியாவை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவருக்கு நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்ததால் பெரும் அவதிக்கு உள்ளானார். இந்நிலையில் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  அங்கு சிகிச்சை பலனின்றி மாலை சுமார் 6 மணியளவில் சிறுமி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் அவருக்கு இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது அவரது உடலை நீரில் குளிப்பாட்டியுள்ளனர்.

  Indonesia
  Indonesia

  அப்போது திடீரென கண்விழித்த சிறுமிக்கு இதய துடிப்பும் இருந்துள்ளது.
  இதனால் அதிர்ச்சியடைந்த உறவுகள் மீண்டும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்துள்ளார்.

  இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இது போன்ற சம்பவம் ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது. அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது” எனத் தெரிவித்துள்ளனர். இறுதி சடங்கின் போது சிறுமி கண்விழித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari