
உடன் வேலை செய்யும் ஆசிரியருடன் மனைவி கள்ளக்காதலில் இருந்ததால் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் (37) ஊத்தங்கரை ஜோதிநகர் அரசுப் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு விக்டோரியா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி பணிக்கு சென்ற சிவக்குமார் நாட்றம்பள்ளி அருகே, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் சிவக்குமார் 5 பெண்களுடன் தகாத உறவை வைத்திருந்தது தெரியவந்தது. இதைதவிர, 8-ம் வகுப்பு மாணவி ஒருவரையும் நாசம் செய்திருக்கிறார். எதைஎதையோ பேசி, அந்த சிறுமியை மயக்கி, சீரழித்து உள்ளார். பிறகு அந்த சிறுமி கர்ப்பமானதும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அபார்ஷனும் செய்ய வைத்திருக்கிறார் சிவக்குமார்.
இருப்பினும் யார் கொலை செய்திருப்பார் என சந்தேகம் ஏற்பட போலீசார் சிவக்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் அவருடன் பணிபுரிந்த அறிவியல் ஆசிரியை லட்சுமியின் கணவர் இளங்கோ உள்ளிட்ட சிலரை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சிவக்குமாருக்கும் லட்சுமி என்ற ஆசிரியைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. பல இடங்களில் தனிமை உறவில் இருந்த இந்த ஜோடியை பற்றி இளங்கோவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளங்கோ, ஊத்தங்கரை அடுத்த வண்டிக்காரன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலிப்படையினரை கொலை செய்ய ஏவி விட்டுள்ளார்.
அவர்களும் கடந்த 29ஆம் தேதி ஆசிரியரை காரில் கடத்திசென்று நாட்றம்பள்ளி அருகேயுள்ள வெலக்கல்நத்தம் செட்டேரி அணை பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர், பங்களாமேடு ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உடலை கீழே தள்ளி அவர் தலை மீது லாரி ஏற்றி விட்டு தப்பியோடியது தெரியவந்தது.
இதனை அடுத்து கொலையாளிகள் இளங்கோ, கூலிப்படை தலைவன் வெள்ளைச்சாமி(40), அதிமுக நிர்வாகி மகன் கணேசன்(35) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைதுசெய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.