Home அடடே... அப்படியா? ‘நாத்திகர்’ அண்ணாதுரை நினைவுநாளில் கோயிலில் தெவச சாப்பாடு! இந்து முன்னணி கண்டனம்!

‘நாத்திகர்’ அண்ணாதுரை நினைவுநாளில் கோயிலில் தெவச சாப்பாடு! இந்து முன்னணி கண்டனம்!

annadurai
annadurai

நாத்திகக் கொள்கைகளை ஆளும் அரசில் திணித்த அண்ணாதுரை நினைவு நாளில், ஆத்திகர்களின் வருவாயில் உள்ள கோயிலில் தெவச சாப்பாடு போடுவது கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆண்டுதோறும் அண்ணாதுரை நினைவுநாளில் ஆலயங்களில் திவச சாப்பாடு போடுவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்து வருகிறது.

இன்று அந்த அமைப்பின் டிவிட்டர் பதிவில்…
பிப்.3 அண்ணாதுரை நினைவு நாள்: கோவிலில் திவச சாப்பாடா?
நாத்திகர் அண்ணாதுரைக்கும் கோவிலுக்கும் என்ன தொடர்பு?
ஆலயத்தின் பணத்தை செலவு செய்யாதே
அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு…

  • என்ற வழக்கமான கருத்துகளுடன் இந்து முன்னணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டிருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவராக இருந்தவருமான அண்ணாதுரை நினைவுநாளான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன். #அறிஞர்அண்ணா

நாத்திகத் தமிழ்மொழி, நாத்திகத் தமிழ் இனம் என்று நாத்திகத் தமிழை முழங்கிட்ட அண்ணாதுரை என்று குறிப்பிட வேண்டும் என முதல்வரின் கருத்துக்கு பதில் கொடுத்து வருகின்றனர் சமூகத் தளங்களில்.

அண்ணாதுரை நினைவுநாளை கோயில்களில், அறநிலையத்துறை செலவில் கடைப்பிடிப்பது தமிழர்களுக்கு இழைக்கும் பச்சைத் துரோகம் என்று குறிப்பிட்டு சிலர் பதிலளித்து வருகின்றனர்.

அடியே மீனாட்சி உனக்கு எதுக்குடி மூக்குத்தி கழட்டடி கள்ளின்னு பேசுன ஹிந்து விரோதி
வெள்ளகாரன் இந்த நாட்ட விட்டு போனாலும் லண்டனில் இருந்து கொண்டாவது சென்னை ராஜதானிய ஆளனும் சொன்னதேசவிரோதி
கம்பரசம், காமரசம், வேலைகாரின்னு நூல் எழுதி இளைஞர் வாழ்க்கைய மழுங்கடிட்தது. இதான் இவர் லட்சணம்.

எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்… என்கிறார் கமல்ஹாசன் தன் டிவிட்டர் பதிவில்.

அதனால் தான் அந்த அண்ணாதுரை வழியில், நாத்திகர் ஒருவரின் தெவசத்தை ஆத்திகம் தழைத்தோங்கும் ஆலயங்களில் செய்வதை வழக்கமாக்கியுள்ள அரசின் இவ்வகைத் திணிப்பை நாங்கள் ஆற்றலுடனும் ஆண்மையுடனும் எதிர்க்கிறோம் என்று பதில் கருத்துகள் பகிரப் பட்டுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version