Homeசற்றுமுன்திமுக.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக., தொடங்கப் பட்டது: டிடிவி தினகரன்!

திமுக.,வை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக., தொடங்கப் பட்டது: டிடிவி தினகரன்!

IMG-20210204-WA0001
IMG-20210204-WA0001

சசிகலாவின் வருகை தமிழகத்தில் சிலருக்கு கெமிக்கல் ரியாக்சனை உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை தொடங்கினோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில்…

வரும் 7ஆம் தேதி சசிகலா வருகிறார். எதிர்ப்பார்ப்போடு கழக தொண்டர்கள், தமிழக மக்கள் காத்துள்ளனர்.

தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென வரவேற்பு அளிக்க உள்ளனர்.

ஒரு வார ஓய்வுக்கு பிறகு சசிகலா வருகை தர உள்ளார்.

கே.பி.முனுசாமி கூறியதற்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் காலம் பதில்சொல்லும்.

சசிகலாவின் வருகை தமிழகத்தில் சிலருக்கு கெமிக்கல் ரியாக்சனை உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை தொடங்கினோம்.

அதிமுக கொடி பயன்படுத்தப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு,

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. சிரிப்பு தான் வருகிறது.

அதிமுக சட்டம் பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலே மட்டும் தான் பொதுக்குழுவை கூட்ட முடியும்.

பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழு மற்றும் கழக தேர்தலை நடத்த முடியும். பதவி வழங்கவும், நீக்கவும் கூடியவர் பொதுச்செயலாளர். அனைத்து அதிகாரமும் கொண்டவர் பொதுச்செயலாளர்.

பொதுச்செயலார் இல்லாத நிலையில் துணை பொதுச்செயலாளர் செய்ய வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுதௌதிருப்போம்.

நான்கு பேர் ஐந்கு பேர் பத்து பேர் கூடி அவர்களே பதவியை நீக்கி விட்டு ஜெ தான் நிரந்தர பொதுச்செயலாளர் எனைக்கூறுவது வேடிக்கையாக உள்ளது.

அதிமுகவை மீட்கும் சனநாயக போராட்டத்தை சசிகலா தொடங்குவார், அதிமுக மீட்கும் போராட்டத்தை அமமுக செய்யும்.

திமுகவை ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற பரந்த மனப்பான்மை எங்களுக்கு உள்ளது. குறுகிய மனப்பான்மை இல்லை.

தேர்தலுக்கு அமமுக தயாராகிகி உள்ளது.

யார் என்ன என்ன பேசினார்கள் என்ன என்பதை சிரித்துக்கொண்டே பார்த்தோம். அவர்கள் அன்று என்ன பேசினார்கள் இன்று என்ன பேசினார்கள் என தெரியும்.

தினகரனுக்கும் சசிகலாவுக்கும் சண்டை என கூறி குட்டையை குழப்பி அம்மாவின் உண்மையான தொண்டகளை குழப்ப உள்ளனர்.
எனக்கும் அவருக்கும் தகராறு எனக்கூறி அவர்கள் சந்தோஷப்படட்டும்.

சசிகலாவுடன் தொலைபேசியில் தான் பேசுகிறோம்.

7 ம் தேதி ஜெ.எம்ஜிஆர் நினைவிடம் போகலாம் என சசிகலா கூறினார். இவர்கள் தீடீரென தடை போட்டுள்ளனர். மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என நினைக்கின்றனர். ஒரு நாள்ஜெ நினைவிடத்தை திறந்து தான் ஆக வேண்டும்.

தினகரனை யாரும் தனிமைப்டுத்தவில்லை. கொரானா கூட என்னை தனிமைப்படுத்த வில்லை.

எங்களை குழப்ப நினைத்தவர்கள் அவர்கள் தான் குழம்பி போய் உள்ளனர்.

அமமுக தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்டெடுக்க தான்.

பாஜக சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பாஜகவிடம் தான் நீங்கள் தான் கேட்க வேண்டும்.

ஸ்லீப்பர் செல் அவர்கள் பணியை சரியாக செய்வார்கள்.

போஸ்டர் அடித்தவர்களை நீக்குவதும், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் மகன் குறித்த என்ன நினைக்கிறீர்கள் கேள்விக்கு,

நடப்பதெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டுள்ளேன்.

தலைகீழாக நின்றாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக என்கிற தீய சக்கியை ஆட்சிக்கு வருவதை அதிமுக தொண்டர்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஜெ உண்மையான தொண்ர்கள் ஜெ வின் ஆட்சியை கட்டாயம் அமைப்பார்கள் அதற்கு சசிகலாவின் பங்கு இருக்கும்.

நலமாக உள்ளேன் என அவரே தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலைமையில் அவர் போட்டியிட முடியாது. சட்ட வல்லனநர்களை கலந்து பேசி வருகிறேன்.

ஒற்றுமை நிலவினால் தினகரன் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?

ஒற்றுமை வரட்டும். பிறகு அதை பற்றி பேசலாம்.

ஒரு லட்சம் போஸ்டர் ஒட்டுவேன் எனக் கூறிய சிவி.சண்முகம் பேட்டியின் போது நிதானமாக இருந்தாரா அதை கேளுங்கள் முதலில் என பேசினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,795FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...

Exit mobile version