திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. கோபாலபுரத்துக்கு இல்லத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் கருணாநிதியை சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து நலம் விசாரித்தேன் என தெரிவித்தார். எனது அரசியல் பிரவேசத்தை தெரிவித்து கருணாநிதியிடம் ஆசி பெற்றேன் எனவும் அவர் தெரிவித்தார். சந்திப்பின் போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உடனிருந்தார்.
அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பின் ரஜினிகாந்த் சந்திக்கும் முதல் தலைவர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.