பிப்ரவரி 25, 2021, 1:46 மணி வியாழக்கிழமை
More

  காதலர் தின பரிசு.. இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள்: காவல்துறை எச்சரிக்கை!

  Home சற்றுமுன் காதலர் தின பரிசு.. இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள்: காவல்துறை எச்சரிக்கை!

  காதலர் தின பரிசு.. இந்த லிங்கை கிளிக் செய்யாதீர்கள்: காவல்துறை எச்சரிக்கை!

  Valentines-Day
  Valentines-Day

  எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகி விட்டது. இலவச பொருட்கள், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் வரும், பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி உலா வருகிறது..

  பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பல போலி செய்திகள் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு செய்திகளில் வருகின்றன.

  valentins-day-gift
  valentins-day-gift

  அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து காதலர் தின பரிசுகள், செல்போன் ஆகியவற்றை வெல்லலாம் என்ற விளம்பரம் வருகிறது. அதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  இந்த நிலையில் இந்த விளம்பரங்களை நம்பி அந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த லிங்கை திறப்பதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணமும் திருடப்படடும் ஆபத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari