பிப்ரவரி 25, 2021, 1:55 மணி வியாழக்கிழமை
More

  வரதட்சணை கொடுமையால் தாய் வீடு சென்ற மனைவி! சமாதானம் என அழைத்து சமாதியாக்கிய கணவன்!

  Home சற்றுமுன் வரதட்சணை கொடுமையால் தாய் வீடு சென்ற மனைவி! சமாதானம் என அழைத்து சமாதியாக்கிய கணவன்!

  வரதட்சணை கொடுமையால் தாய் வீடு சென்ற மனைவி! சமாதானம் என அழைத்து சமாதியாக்கிய கணவன்!

  murder-2-1
  murder-2-1

  உத்தரப்பிரதேசத்தில் 28 வயதான கணவர், தனது 25 வயது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரின் பரி ஓஜா பகுதியைச் சேர்ந்த காஞ்சன் (25), அவரது கணவர் அமித் லால் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள நசீர்பூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு இரண்டு வயது மகன் உள்ளார்.

  காஞ்சனின் மாமியார் எப்போதும் வரதட்சணைக்காக அவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே அவர் அடிக்கடி தனது கணவர் மற்றும் மாமியாருடன் சண்டையிட்டுள்ளார்.

  கணவர் மற்றும் மாமியாரின் தொடர்ச்சியான துன்புறுத்தல்களால் சோர்வடைந்த காஞ்சன் ஜனவரி 4 ஆம் தேதி ஹமீர்பூரில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றார்.

  இந்நிலையில் பிப்ரவரி 2 ம் தேதி மர்மமான சூழ்நிலையில் காணாமல் போயுள்ளார். இதன் பின்னர், பிப்ரவரி 3 ஆம் தேதி அவர் காணாமல் போனதாக அவரது பெற்றோர் சுசேதா போலீசில் புகார் அளித்தனர். மேலும் தங்கள் மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  அவர் கணவரிடம் நடத்திய விசாரணையில், அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

  தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார்.

  அந்த பெண் காணாமல் போன நாளன்று, அவரது கணவர் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதுமீண்டும் சேர்ந்து வாழலாம் என்று ஹமீர்பூர் நகருக்கு வருமாறு மனைவியிடம் கூறியுள்ளார்.

  அவரை நம்பி மனைவியும் உடன் சென்றுள்ளார். பின்னர் தனது மனைவியை அருகிலுள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்று, அவருடன் உடலுறவு கொண்டுள்ளார்.

  பின்னர் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அவரின் மொபைல் போனை ஆற்றில் வீசியதுடன், அப்பெண்ணின் உடலை அருகிலுள்ள வயலில் மறைத்து வைத்துள்ளார்.

  இவை அனைத்தையும் அவர் வாக்குமூலமாக அளித்துள்ளார். பின்னர் வயல்களில் இருந்து மீட்கப்பட்ட உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணவர் மீது 302 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு அவரை சிறையில் அடைத்துள்ளனர்.