பிப்ரவரி 25, 2021, 1:12 மணி வியாழக்கிழமை
More

  காவலரிடமே களவாடிய திருடன்! ஏடிஎம் இல் பறிபோன 80 ஆயிரம்!

  Home சற்றுமுன் காவலரிடமே களவாடிய திருடன்! ஏடிஎம் இல் பறிபோன 80 ஆயிரம்!

  காவலரிடமே களவாடிய திருடன்! ஏடிஎம் இல் பறிபோன 80 ஆயிரம்!

  atm
  atm

  தனிப்பிரிவு காவலரின் ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி, 80 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த சாத்தங்குடியை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் மதுரையில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

  இந்த நிலையில் செல்லப்பாண்டி சில நாட்களுக்கு முன்பு திருமங்கலத்தில் உள்ள ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, ஏடிஎம் இயந்திரம் சரிவர செயல்படாததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த இளைஞர், அவரது ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்து உள்ளார்.

  இதனை அடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது ஏடிஎம் கார்டு மாறி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உடனடியாக வங்கியில் சென்று விசாரித்தபோது, அவரது கணக்கில் இருந்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் மர்மநபர் மீது அவர், திருமங்கலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் கார்டை நூதன முறையில் மாற்றி பணத்தை திருடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் காவலரிடமே பணம் திருடப்பட்ட சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari