Home அடடே... அப்படியா? எதிர்க்கட்சிகள் அடித்த அந்தர் பல்டி… புட்டுப் புட்டு வைத்த பிரதமர் மோடி!

எதிர்க்கட்சிகள் அடித்த அந்தர் பல்டி… புட்டுப் புட்டு வைத்த பிரதமர் மோடி!

pm-modi-in-rajyasabha
pm-modi-in-rajyasabha

விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் மசோதாக்கள் குறித்து இதுவரை பேசிவந்த எதிர்க்கட்சிகள் இப்போது அந்தர்பல்டி அடித்து, யு டர்ன் அடித்து செயல்படுவது குறித்து, தனது கேள்விகளை எழுப்பினார் பிரதமர் மோடி.

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிரதமர் மோடி நீண்ட் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியவை…

சிறுகுறு விவசாயிகளின் கஷ்டங்களை, அனைவரும் நன்கு அறிவார்கள்.  அவ்வப்போது, அவர்களின் அதிகாரப்பங்களிப்பு கோரிக்கைகள் எழுந்தன. 

நம்முடைய மதிப்பிற்குரிய ஷரத் பவார் அவர்களும், மேலும் காங்கிரஸ் தலைவர்கள் என, அனைத்துத் தரப்பினரும், அனைத்து அரசுகளும், விவசாய சீர்திருத்தங்களை வலியுறுத்தி இருக்கின்றார்கள்.  யாரும் மறுத்துப் பேசவில்லை.  ஏனென்றால் அனைவருக்கும் தெரியும், செய்ய முடிந்தது முடியவில்லை வேறு விஷயம்.  ஆனால் இந்த விஷயம் நடக்க வேண்டும், என்று அனைவரும் பதிவு செய்திருக்கிறார்கள்… இன்று அல்ல அனைத்து அரசுகளும். 

ஷரத் அவர்கள் இப்போது உரையே ஆற்றியிருக்கின்றார்கள், அதாவது நான் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கிறேன் என்று.  சரி, வழிமுறைகள் குறித்து சில வினாக்கள் எழலாம்.  ஆனால் சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.  ஆகையாலே, நான் என்ன கூறுகிறேன் என்றால் நாம், இந்த விஷயத்திலே, நம்முடைய நண்பர், திருவாளர் சிந்தியா அவர்கள் மிக நேர்த்தியாக, பல கோணங்களில், இந்தச் சட்டங்கள் தொடர்பாக, கூறினார். 

இந்த விஷயங்கள் அனைத்தும், கடந்த 20 ஆண்டுகளாக பேசப்பட்டு மட்டுமே வந்திருக்கின்றன.  அனைத்து மேடைகளிலும் பேசப்பட்டன.  ஏதோ நாங்கள் வந்த பிறகு மட்டுமே வந்தன என்பதில்லை.  அனைவரும் கூறியிருக்கிறார்கள்.  அனைவரும் காலம் கனிந்து விட்டது செய்ய வேண்டும் செய்து விடலாம் என்றே கருதினார்கள்,

இங்கே அங்கே முற்றுப்புள்ளி காற்புள்ளி…. இருக்கலாம்.  யாரும் இங்கே அறுதியிட்டுக் கூறவில்லை, எங்கள் கால எண்ணம் மிகச் சிறப்பாக இருந்தது என்று.  நானுமே கூற முடியாது…. நாங்கள் செய்வது தான் மிகச் சிறப்பு என்று. பத்தாண்டுகளுக்குப் பின்னால் புதிய கருத்து ஏற்படவே செய்யாது என்று.  அப்படியெல்லாம் ஏதும் இல்லை. 

pm modi in rajyasabha

நமது சமூகம் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் திறன் படைத்தது.  இன்றைய காலத்தில் எது சரியாக இருக்கிறதோ அதை மேற்கொள்வோம், வருங்காலத்தில் சீர்திருத்துவோம், புதிய கூறுகளை இணைப்போம்.  இது தானே வளர்ச்சிக்கான பாதை!! 

தடைகளைப் போடுவதால் வளர்ச்சி எப்படி ஏற்படும் ஐயா?  ஆகையினாலே தான், எனக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. இப்படி ஒரு அந்தர்பல்டியை எப்படி நீங்கள் அடித்தீர்கள் என்று.  ஏன் இப்படிச் செய்தீர்கள்? 

பரவாயில்லை.  நீங்கள் போராட்டக் கருத்துக்களை முன்வைத்து அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுங்கள். ஆனால், இதோடு கூடவே விவசாயிகளிடமும் கூறியிருக்க வேண்டும், ஐயா, மாற்றம் மிகத் தேவையானது பல ஆண்டுகள் ஆகி விட்டன, இப்போது சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று.  தேசம் முன்னேற்றம் அடையுமே! ஆனால் இப்போது, என்ன நிலைமை என்றால், அரசியல் அதீத முக்கியத்துவம் பெற்று, தங்களுடைய நிலைப்பாடுகளையே தொலைக்க நேர்கிறது.  ஆனால் ஏன் இவற்றையெல்லாம் செய்கிறார்கள்? நல்ல விஷயம்.

மதிப்பிற்குரிய மன்மோஹன் சிங் அவர்களும் இங்கே இருக்கிறார்கள். அவர் கூறியதையே நான் இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன். ஒருவேளை அந்தர்பல்டி அடிக்கும் அவர்கள், நான் சொல்வதை கேட்கா விட்டாலும் அவர் கூறுவதையாவது கண்டிப்பாகக் கேட்கலாம். 

சந்தைப்படுத்தும் அமைப்பு காரணமாக, மேலும் பல கடுமையான விஷயங்கள் இருக்கின்றன, 1930களில் இவை ஏற்படுத்தப்பட்டவை. அதிகபட்ச வருமானம் கிடைக்கும், வழிவகைகளை அடைத்து, இவை நம், விவசாயிகளுக்குத் தடை போடுகின்றன.

எங்களுடைய நோக்கம் இவற்றை அகற்றுவது தான், எங்களுடைய நோக்கம் இவற்றை அகற்றுவது தான்.

இந்தியா தனது முழுமையான திறனையும், ஒருங்கிணைந்த சந்தையையும், ஏற்படுத்த…. தடையாக இருக்கும் அனைத்துத் இடர்களையும், நீக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.  இது தான் மதிப்பிற்குரிய மன்மோஹன் சிங் அவர்கள் கூறியது. 

மதிப்பிற்குரிய மன்மோஹன் சிங் அவர்கள், விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை விற்கும் சுதந்திரம் அளிக்க, இந்தியாவிற்கு ஒரு விவசாய சந்தை அளிக்க, தன்னுடைய நோக்கத்தை தெளிவுபடுத்தியிருக்கிறார்.  அந்த வேலையை நாங்கள் செய்து வருகிறோம்.

உங்களுக்கு எல்லாம் பெருமிதம் ஏற்பட வேண்டும், நமது மன்மோஹன் சிங்ஜி சொன்னதை, மோதி செய்து கொண்டிருக்கிறார் என்று. பெருமைப்படுங்கள் ஐயா.

வேடிக்கை என்னவென்றால், யாரெல்லாம், குதித்து குதித்து அரசியல் செய்கிறார்களோ, அவர்களின் மாநிலங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போது, இதிலிருந்தே, அரைகுறையாகக் கையாண்டும் வருகிறார்கள்.  அனைவருமே. 

இங்கே எதிர்த்தரப்பில் இருப்போரின் மாநில அரசுகள், சில அம்சங்களை அமல் செய்தும் இருக்கின்றார்கள் அவர்களுக்கும் தெரியும் எதிர்காலத்தில் இது தான் வளர்ச்சிப் பாதை என்று. 

இந்த விவாதங்களில் நான் கவனித்தேன், சட்டத்தின் நோக்கம் குறித்து யாரும் விவாதம் செய்யவில்லை.  குறை என்னவென்றால் வழிமுறை சரியில்லை; விரைந்து செய்து விட்டார்கள்; இவர்களைக் கேட்கவில்லை; இதெல்லாம் நடக்கும். 

ஒரு குடும்பத்தில் திருமணம் நடக்கும் போது என்னைக் கேட்கவில்லை என்று கோபப்படுவார்கள், என்னை எங்கே மதித்தீர்கள் என்பார்கள்.  இதெல்லாம் சகஜம் தானே!! இத்தனை பெரிய குடும்பம் எனும் போது, இதெல்லாம் இருக்கத் தான் செய்யும்!!  (சிரிப்பு) 

நாம் வேறு விஷயங்கள் பற்றியும் பேசலாம்.  இப்போது பாருங்கள்.  பால் உற்பத்தி.  எந்த ஒரு கட்டுக்களாலும் தடைப்பட வில்லை.  கால்நடை வளர்ப்பவர்களுக்கும் தளையில்லை, பாலும் தடைப்படவில்லை

ஆனால் வேடிக்கை பாருங்கள்!!  பால்வளத் துறையிலே ஒன்று தனியார், அல்லது கூட்டுறவு.  இரண்டுமே பலமான பிணைப்பை ஏற்படுத்தி இருக்கின்றன… ஒத்துழைப்போடு ஈடுபட்டு வருகின்றன.  மிகச் சிறப்பானதொரு விநியோகச் சங்கிலி நம் நாட்டிலே உருவாகி இருக்கிறது.  இது நல்லது, இதைப் பாராட்ட வேண்டும் ஆனால் இதை நாங்கள் ஏற்படுத்தவில்லை.  இதற்கு நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் (சிரிப்பு). 

எங்கள் ஆட்சிக்கு முன்பே ஏற்பட்டு விட்டது.  நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். 

காய்கனிகளோடு தொடர்புடைய விஷயத்தில், பெரும்பாலான சந்தைகளுக்கு நேரடியான, தொடர்பு இருக்கிறது.  சந்தைகளின் தலையீடு இப்போது அகன்றது.  இதனால் ஆதாயம் ஏற்பட்டு வருகிறது.  காய்கனிகளை விற்பனை செய்பவர்களின் நிலங்கள் பறிக்கப்படும் என்றால், பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகள் இதுவரை பறிக்கப்பட்டு விட்டனவா சொல்லுங்கள்…. பால் கிடைத்து வருகிறதே!!  கால்நடைகள் பறிக்கப்படவில்லையே!! 

நம்முடைய நாட்டிலே, பால்வளத்துறையின் பங்களிப்பு, வேளாண் பொருளாதார அமைப்பின் மொத்த மதிப்பிலே, 28 சதவீதத்துக்கும் அதிகமானது.  அதாவது இந்த அளவுக்கு நாம் விவசாயம் பற்றிப் பேசும் போது இந்த விஷயத்தை மறந்து விடுகிறோம்.  28 சதவீதம் பங்களிப்பு. 

மேலும், கிட்டத்தட்ட 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள வியாபாரம்.  உற்பத்தி செய்யப்படும் பாலினுடைய, மதிப்பு, தானியங்கள் பருப்பு வகைகள் இரண்டையும் சேர்த்தால் அதை விட அதிகமானது.  நாம் இதுபற்றி சிந்திப்பதே இல்லை. 

கால்நடை வளர்ப்பவர்களுக்கு முழுமையான சுதந்திரம்.  தானியங்கள் பருப்புவகை உற்பத்தியாளர்கள், சிறுகுறு விவசாயிகளுக்கும், எப்படி பால் உற்பத்தியாளர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கிறதோ, இது போன்ற சுதந்திரம் ஏன் கிடைக்கக் கூடாது?  இந்த வினாக்களுக்கான விடையையும் நாம் தேடினால், நாம் சரியான பாதையில் பயணிப்போம். 

மதிப்பிற்குரிய அவைத்தலைவர் அவர்களே, ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும், நம்முடைய …. இயல்பு எவ்வாறு இருக்கிறதோ… வீட்டிலும் கூட, சற்று மாற்றம் ஏற்பட்டால் வீட்டிலும் கூட, அழுத்தம்.  இதை அங்கே வை ஏன் இங்கே வைத்தாய் என்று….. வீட்டிலும் நடக்கிறது இல்லையா? 

இத்தனை பெரிய தேசத்தில் நாம் ஒரு வழக்கத்தில்… வந்திருக்கும் போது இதை நான் இயல்பானவையாகவே கருதுகிறேன். ஒரு புதிய விஷயம் வரும் போது இப்படி அப்படித் தான் இருக்கும், இதில் விநோதம் இல்லை.  ஒரு வகையான நிலையற்ற தன்மை இருக்கும். 

ஆனால் பசுமைப் புரட்சி நடைபெற்ற நாட்களை நீங்கள் சற்றே நினைத்துப் பாருங்கள்.  பசுமைப் புரட்சிக் காலத்தில் நடைபெற்ற விவசாய சீர்திருத்தங்கள், அப்போதும், எழுப்பப்பட்ட ஐயப்பாடுகள், மூண்ட போராட்டம், இவை நன்கு ஆவணப் படுத்தப் பட்டிருக்கின்றன.  இவை ஒரு படிப்பினை. 

விவசாயத் துறை சீர்திருத்தங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட போது, சாஸ்த்ரிஜியுடைய நிலை என்ன தெரியுமா?  அவருடைய சகாக்களிலே யாரும், விவசாயத் துறை அமைச்சராகத் தயாராக இல்லை.  ஏனென்றால் தாங்கள் பாதிக்கப்படுவோம் விவசாயிகளின் கோபத்தால், தங்கள் அரசியல் வாழ்க்கை நாசமாகும் என்று பயந்தார்கள்.  இவை சாஸ்திரிஜியின் காலகட்ட சம்பவங்கள். 

ஆகையால், இறுதியில் சாஸ்திரி அவர்கள், சி. சுப்பிரமணியன் அவர்களை, விவசாயத்துறை அமைச்சராக்கினார்.  மேலும், அவர் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசினார்.  திட்டக்குழுவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. 

வேடிக்கையைப் பாருங்கள்.  திட்டக் குழுவும் எதிர்ப்புத் தெரிவித்தது.  நிதியமைச்சகம் உள்ளிட்ட அமைச்சரவை மொத்தத்திலும்…. எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.  ஆனால், நாட்டு நலனை முன்னிட்டு சாஸ்திரிஜி முன்னேறிச் சென்றார்.  அப்போது இடதுசாரிகள்…. இன்று பேசுவதையே தான், அன்றும் பேசினார்கள்.  என்ன சொன்னார்கள்?  அமெரிக்கா கண்ணசைத்ததால் தான், சாஸ்திரிஜி இதைச் செய்கிறார்.  அமெரிக்கா கண்ணசைத்ததால் தான், காங்கிரஸ் இதைச் செய்கிறது

இன்று என் கணக்கில் எதையெல்லாம் கொட்டுகிறார்களோ, இவை எல்லாம் முதலில் உங்கள் கணக்கில் இருந்தன.  அனைவரையும், அமெரிக்க ஏஜெண்டுகள் என்று கூறினார்கள் அனைத்துக் காங்கிரஸ் தலைவர்களையும்.  இவை அனைத்தையும்…. இன்று இடதுசாரிகள் பேசுவன எல்லாவற்றையும், இவர்கள் அன்றும் இதையே தான் கூறினார்கள். 

விவசாய சீர்திருத்தங்கள் சிறுகுறு விவசாயிகளை அழிக்க வந்தவை என்றார்கள்.  தேசமெங்கும் ஆயிரக்கணக்கான போராட்டங்களை கட்டவிழ்த்து விட்டார்கள்.  பெரிய இயக்கம் நடத்தப்பட்டது.  இந்தச் சூழ்நிலையிலும் கூட, லால்பஹாதுர் சாஸ்திரிஜியும் பின்வந்த அரசும், தொடர்ந்து செய்ததால், விளைந்த விளைவாலேயே, முன்பு நாம் PL 480 ரக அரிசியை வாங்கிய நிலைமை போய், இன்று தேசத்தால் தனது விவசாயி விளைவித்த உணவுப் பொருளை உண்ண முடிகிறது….

  • தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

1 COMMENT

  1. அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய அருமையான நல்ல பல உதாரணங்களுடன் எடுத்துரைக்கப்பட்ட பேச்சு. போராட்டக்காரர்கள் (விவசாய) தெளிந்து சட்டங்களை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவோம்.

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version