May 8, 2021, 4:08 pm Saturday
More

  மனம் கசிந்து கண்ணீர் விட்ட பிரதமர் மோதி..! ஏன்?

  இந்த எதிர்பார்ப்பை, நான் மனதில் அடைகாத்து வைப்பேன். உங்களை ஓய்வுபெற நான் விடமாட்டேன். (சிரிப்பு). மீண்டும் ஒருமுறை

  modi-in-parliament-praising-gulam-nabi-azad
  modi-in-parliament-praising-gulam-nabi-azad

  நாடாளுமன்ற அவையில், நான்கு உறுப்பினர்களின் பிரிவு உபசார நிகழ்வின் போது பேசிய பிரதமர் மோதி, திடீரென மனம் உடைந்து கண்ணீர் சிந்தினார். இந்தப் படங்கள் இன்று சமூகத் தளங்களில் வைரலாகின. பிரதமர் மோதி அவ்வாறு பேசியவற்றில் இருந்து…

  இந்த அவையின் மாட்சியை அதிகரிக்கும், அவையில் உயிர்ப்பை உருவாக்கும், மேலும் அவையின் வாயிலாக, மக்கள் சேவையில் ஈடுபட்ட, இப்படிப்பட்ட, நமது நான்கு சகாக்கள், அவர்களுடைய பணிக்காலம், நிறைவடைந்த காரணத்தால், புதிய பணியை நோக்கி….. கால் பதிக்கின்றார்கள். 

  திரு குலாம் நபி ஆஸாத் அவர்கள்,  திரு ஷம்ஷேர் சிங் அவர்கள், திரு பீர் மொஹம்மத் ஃபையாஸ் அவர்கள், திரு நாஸிர் அஹமத் அவர்கள்.   நான் இந்த நான்கு மதிப்பிற்குரியவர்களுக்கும், இந்த அவையின் மாட்சிமையை வளப்படுத்தியமைக்கு, உங்களுடைய அனுபவத்தால், உங்கள் அறிவால், அவைக்கும் நாட்டிற்கும் வளம் சேர்த்தமைக்கு, உங்களுடைய பகுதியின் பிரச்சனைகளுக்கான தீர்வுக்குப் உதவியமைக்கு, நீங்கள் அளித்திருக்கும், பங்களிப்பு ஆகியவற்றுக்கு, இவற்றுக்காக,  நான் முதன்மையாக உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  

  பீர் மொஹம்மத் அவர்களும், நாஸிர் அஹம்மத் அவர்களும், இவர்கள் இருவரும் எப்படிப்பட்ட சகாக்கள் என்றால், அவையில் ஒருவேளை, மிகக்குறைவானவர்களின் கவனம் இவர்கள்பால் சென்றிருக்கலாம்.  ஆனால் என் அறையில் அமர்ந்து கொண்டு, பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்யாத, கூட்டத்தொடர் இல்லை, என்ற அளவுக்கு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  கஷ்மீரம் தொடர்பான நுணுக்கங்களை,  இவர்களிடம் நான் தெரிந்து கொண்டேன்

  சில சமயம் தங்கள் குடும்பங்களோடு வருவார்கள்.   எனக்குப் பல கண்ணோட்டங்களை அவர்கள் அளித்தார்கள் என்னைப் பொறுத்தமட்டில், இது ஒரு கற்றல் அனுபவம்.  நான், நமது இந்த இரண்டு சகாக்கள், என்னோடு தனிப்பட்ட உறவு கொண்ட இவர்கள், எனக்கு அளித்த தகவல்கள், இவற்றிற்காக, நான் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.   

  எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது இவர்களுடைய அர்ப்பணிப்பும், இவர்களுடைய திறனும், இவை இரண்டுமே, நாட்டிற்காக, மேலும் குறிப்பாக, ஜம்மு கஷ்மீரத்துக்குக் கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும்.   தேசத்தின் ஒற்றுமை, தேசத்தின்…. சுகம் அமைதி பெருமையைப் பெருக்குவதில், பேருதவியாக இருக்கும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.  நமது மற்றொரு சகாவான ஷம்ஷேர் சிங் அவர்கள், எத்தனை ஆண்டுகளாக நான் அவரோடு பணியாற்றி வருகிறேன் என்று நினைவுகூட இல்லை. 

  நான்….. அமைப்பினிலே இணைந்து பணியாற்றிய வேளையிலே, இதே துறையிலே பணியாற்றி வந்தேன்.  பல ஆண்டுகள் ஜம்மு கஷ்மீரத்தில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.  என்னுடைய சக பணியாளர் என்ற வகையிலே, சில சமயம் ஸ்கூட்டரில் பயணிக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும்.   சிறுவயதில் அவசர காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கே ஷம்ஷேர் சிங் அவர்களும் இருந்தார்கள். 

  மேலும், இந்த அவையிலே, ஷம்ஷேர் சிங் அவர்களுடைய வருகை 96 சதவீதமாக இருக்கிறது.   இது உண்மையிலேயே, மக்கள் அவருக்கு அளித்திருக்கும் பொறுப்பினை, அதை முழுமையாக நிறைவேற்றும் முயற்சியைக் காட்டுகிறது.  மென்மையாகப் பேசுபவர், எளிமையானவர், எனக்கு நம்பிக்கை இருக்கிறது அதாவது, ஜம்மு கஷ்மீரத்திலிருந்து, ஓய்வு பெறவிருக்கும் இந்த நான்கு மகத்துவமான உறுப்பினர்களுடைய,  இவர்களின் பணிக்காலம் தான் மிகச் சிறப்பானதாக இருந்திருக்கின்றது.  

  ஏனென்றால், வரலாறு ஒரு புதிய திருப்பத்தைப் புரிந்திருக்கின்றது.   இதன் சாட்சிகளாக இவர்கள் இருந்திருக்கின்றார்கள், சகபயணிகளாக இருந்திருக்கின்றார்கள், இது இவர்கள் வாழ்வின் மிகப்பெரிய தருணம். 

  திரு குலாம் நபி அவர்கள்.  எனக்கு என்ன கவலை என்றால், குலாம் நபி அவர்களுக்குப் பிறகு, இந்தப் பொறுப்பை நிர்வகிக்க இருப்பவர், அவர் குலாம் நபி அவர்களுக்கு இணையாக செயல்படுவதில் கஷ்டப்படுவார். 

  ஏனென்றால் குலாம்நபி அவர்கள் தன் கட்சி பற்றி அக்கறையுடையவர், ஆனால், தேசம் அவை பற்றியும் அதே அளவு அக்கறை உடையவர்.   இது சிறிய விஷயம் இல்லை ஐயா.  இது மிகப்பெரிய விஷயம்.  இல்லையென்றால், எதிர்த்தரப்புத் தலைவர் என்ற வகையில், தன அதிகாரத்தை நிலைநாட்டுதல், இந்த மோஹம்….. யாருக்கும் ஏற்படக்கூடும். 

  ஆனால் அவர், அவை தொடங்கி…. நான் ஷரத் பவார் அவர்களையும் இதே தரநிலையில் பார்க்கிறேன்.  இவர்கள் அவையின் மாட்சிமைக்கு முதன்மை அளிக்கும் தலைவர்களில் அடங்குவர்.  குலாம்நபி அவர்கள், மிகச்சிறப்பாக இந்தப் பணியை நிறைவேற்றியிருக்கிறார்கள்.  எனக்கு நினைவிருக்கிறது, இந்த கொரோனா காலத்திலே, நான் வந்து…. அவைத்தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தேன்.  

  அதே நாளன்று குலாம்நபி அவர்களுடைய…. ஃபோன் வந்தது.  மோதிஜி நீங்கள் செய்வது சரிதான் ஆனால் இன்னொரு வேலையும் செய்யுங்கள்.  அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.  எனக்கு இது நன்றாகப் பட்டது.  அதாவது அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துப், பேசுங்கள் என்ற ஆலோசனையை அளித்தார். 

  நானும் அப்படியே கூட்டினேன்.  இதை குலாம்நபி அவர்கள் கூறியதன் பேரிலேயே செய்தேன்.  இதை கூறுவதில் எனக்கு சங்கடமேதும் இல்லை.  அதாவது இந்தமாதிரியான, பரிமாற்றம், இதற்கான அடிப்படைக்காரணம் அவருக்கு இருதரப்பிலும் இருக்கும் வளமான அனுபவம்.   ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு.  28 ஆண்டுகள் செயல்பாடு, இதுவே ஒரு பெரிய விஷயம் ஐயா.  பல ஆண்டுகள் முந்தைய விஷயம், இது அடல் அவர்கள் காலத்திய விஷயமா நினைவில்லை. 

  நான் ஒரு வேலையாக அவைக்கு வந்திருந்தேன்.  அப்போது நான் அரசியலில் இருக்கவில்லை.  அதாவது… தேர்தல் அரசியலில் இருக்கவில்லை.  நான் அமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன்.  நானும் குலாம்நபி அவர்களும் …. அப்படியே தாழ்வாரத்தில் பேசிக் கொண்டிருந்தோம்.  பத்திரிக்கையாளர்களின் இயல்பு அனைத்தையும் உற்று நோக்குவது இல்லையா எப்படி இவர்களிடையே இணைப்பு என்று. 

  நாங்கள் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்தோம்.  நாங்கள் புறப்பட்டவுடனேயே பத்திரிக்கைக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.   குலாம்நபி அவர்கள் அருமையான ஒரு விடையை அளித்தார் அந்த விடை…. நம்மனைவருக்கும் மிக உதவிகரமாக இருக்கும்.   ஐயா இதோ பாருங்கள் நாங்கள்…. செய்தித்தாள்களில் ஊடகங்களில் பொதுமேடைகளில் மோதுவதைப் பார்த்திருப்பீர்கள்,

  ஆனால் உண்மையைச் சொன்னால்… இந்தக் கூரையின் கீழே, எங்களிடம் இருப்பதைப் போன்ற குடும்பச்சூழல் வேறு எங்குமே காண முடியாது.   இந்த அளவுக்கு எங்களுக்கு நெருக்கம் இருக்கிறது சுகதுக்கங்கள் இருக்கின்றன.   இந்த உணர்வு இருக்கிறதே இந்த உணர்வு மட்டுமே, மிகப் பெரிய விஷயம்.  குலாம்நபி அவர்களின் ஒரு ஆர்வம்… மிகக் குறைவானவர்களுக்கே தெரியும்.  அவரோடு அமர்ந்து பேசினால், அவரே கூறுவார்.  நாம்… அரசு பங்களாக்களில் வசிக்கிறோம். 

  நமது மனம் பங்களாவின் சோஃபாசெட் சுவர்கள் இவற்றைச் சுற்றியே இருக்கும்.  ஆனால் குலாம்நபி அவர்கள்,  அந்த பங்களாவில் ஏற்படுத்தியிருக்கும் தோட்டம், ஒருவகையிலே, கஷ்மீர் பள்ளத்தாக்கை நினைவுபடுத்தி விட்டார்.  அப்படிப்பட்ட ஒரு தோட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.  இதன்மீது அவருக்குப் பெருமிதம் உண்டு நேரம் செலவழிக்கிறார்.

  புதுப்புது விஷயங்களை இணைக்கிறார்.  ஒவ்வொரு முறையும் போட்டி நடக்கும் போது, அவரது பங்களாவே முதலிடம் பெறுகிறது.  அதாவது, தனக்களிக்கப்பட்ட அரசு பங்களாவையும் கூட, எத்தனை நேசத்தோடு அழகு பார்க்கிறார், அதாவது தன் மனதை, ஈடுபடுத்தி அழகுபடுத்தி இருக்கிறார்.  அவர் முதலமைச்சராக இருந்த போது, நானும் ஒரு மாநில முதல்வர் என்ற வகையிலே பணியாற்றி வந்தேன். 

  எங்களிடையே ஆழமான உறவு இருந்து வந்தது.  அந்த நாட்களிலே.  நான் கூறவிருக்கும் சம்பவம் போல ஒன்று நடந்திருக்காது.  இது எங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்தியது.  ஒருமுறை, குஜராத்தைச் சேர்ந்த… பயணிகள் ஜம்மு கஷ்மீரம் செல்லும் குஜராத்திகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கக்கூடியது. 

  தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.  கிட்டத்தட்ட 8 பேர்கள் உயிரிழந்தார்கள்.  முதன்மையாக குலாம்நபி அவர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது.  (emotion begins)   அந்த அழைப்பு, தகவல் அளிக்க மட்டுமல்ல.  அவருடைய கண்ணீர், சற்றும் நிற்கவே இல்லை.  தொலைபேசியில்.  அந்த சமயத்தில், ப்ரணவ் முகர்ஜி ஐயா….. பாதுகாப்புத்துறை அமைச்சர்.  நான் அவருக்கு ஃபோன் செய்தேன், ஐயா கொஞ்சம், ஒருவேளை… படைவிமானம் அளித்தால், சடலங்களைக் கொண்டு வரமுடியும்.  இரவு நெடுநேரமாகி இருந்தது.  ப்ரணவ் முகர்ஜி அவர்கள் கவலைப்படாதீர்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

  ஆனால் இரவிலே குலாம்நபி அவர்களிடமிருந்து மீண்டும் அழைப்பு.  அவர் விமான நிலையம் சென்றார்.  சாரி.  அந்த இரவிலே, விமான நிலையத்திலிருந்து, அவர் ஃபோன் செய்தார்.  மேலும், எப்படி, தங்களுடைய, குடும்பத்தார் பற்றி கரிசனப்படுவார்களோ, அப்படிக் கரிசனம் காட்டினார்….. பதவி, அதிகாரம், வாழ்க்கையில் வரும்போகும்.  ஆனால், இவற்றை சமமாக பாவிப்பது….. என் மனதை உணர்வுபூர்வமாகத் தொட்ட விஷயம் இது.  அடுத்த நாள் காலையில் மீண்டும் ஃபோன் வந்தது.  மோதிஜி அனைவரும் வந்து விட்டார்களா?  ஆகையால், ஒரு நண்பர் என்ற வகையில், குலாம்நபி அவர்களை, சம்பவங்கள் மற்றும் அனுபவரீதியாக நான் மதிக்கின்றேன். 

  எனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது, அவருடைய இனிய சுபாவம், அவரது பணிவு, இந்த தேசத்திற்காக சாதிக்க வேண்டும் என்ற, அவருடைய ஆர்வம், இவை அவரை நிம்மதியாக இருக்க விடாது.  மேலும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அவர் எங்கே என்ன பொறுப்பை ஏற்றார் என்றாலும், அவர் கண்டிப்பாக மதிப்புக்கூட்டல் செய்வார், தனது பங்களிப்பை அளிப்பார், இதனால் தேசம் பலனடையும் என்பதில் எனக்கு அசையா நம்பிக்கை இருக்கிறது. 

  நான் மீண்டும் ஒருமுறை, அவரது சேவைகளுக்காக மரியாதை கலந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.  மேலும், தனிப்பட்ட முறையிலும் கூட, அவரிடம் எனது வேண்டுகோள், நீங்கள் இந்த அவையில் இல்லை, என்று மனதாலும் நினையாதீர்கள்.  

  உங்களுக்காக, எனது கதவுகள் திறந்தே இருக்கும் நான்கு மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கும் திறந்திருக்கும்.  உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய ஆலோசனைகள், இவையெல்லாம் தேசத்திற்கு மிகவும் தேவையான விஷயங்கள்.  இந்த அனுபவம் மிக உதவிகரமாக இருக்கும்.  இவை எனக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும். 

  இந்த எதிர்பார்ப்பை, நான் மனதில் அடைகாத்து வைப்பேன்.  உங்களை ஓய்வுபெற நான் விடமாட்டேன்.  (சிரிப்பு).  மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துக்கள் நன்றி. 

  • தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,165FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »