Home அடடே... அப்படியா? ஆந்திராவை பிடிச்சாச்சு.. அடுத்து தெலங்காணா..! ஜெகன் சகோதரி ஷர்மிளா புதிய கட்சி ‘கணக்கு’!

ஆந்திராவை பிடிச்சாச்சு.. அடுத்து தெலங்காணா..! ஜெகன் சகோதரி ஷர்மிளா புதிய கட்சி ‘கணக்கு’!

ys-sharmilaa
ys sharmilaa
  • ஆந்திர முதல்வர் ஜகனின் சகோதரி தெலங்காணாவில் புதுக் கட்சி தொடங்குகிறார்.
  • ஜெகனின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா புது கட்சி தொடங்குவதற்கு முகூர்த்தம் குறித்துள்ளார்.
  • ஷர்மிளா சொந்த கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று வரும் பிரச்சாரம் உண்மையே என்பது உறுதியானது

செவ்வாய்க் கிழமையன்று ஆந்திர முதல்வர் ஜெகன் சகோதரி ஷர்மிளா, புதுக் கட்சிக்கு அடித்தளம் போட்டார். இது தொடர்பாக ‘லோட்டஸ் பாண்ட் ‘டில் ஷர்மிளாவின் கணவர் பிரதர் அனில் அலுவலகத்தில் ஷர்மிளா முக்கியக் கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்திற்கு வரும்படியாக பலருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்களோடு கூட ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டதால், ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது.

தன் தந்தை ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி தெலங்காணா மக்களுக்கு என்ன செய்ய விரும்பினாரோ அவற்றை தான் நிறைவேற்ற இருப்பதாக ஷர்மிளா ஏற்கெனவே பல இடங்களில் கூறி வருகிறார்.

ys sharmila

முதலில் தெலங்காணாவில் நல்கொண்டா மாவட்டத் தலைவர்கள் ஷர்மிளா கலந்து பேச உள்ளார்.

சிஎம் ஜகன் வேறு… நான் வேறு அல்ல… ஜெகனுடைய பணி அவருடையது. என்னுடைய பணி என்னுடையது.. என்று இந்த நேரத்தில் ஷர்மிளா உறுதியுடன் கூறினார்.

தெலங்காணாவில் ‘ராஜன்னா ராஜ்ய’த்தை எடுத்து வருவேன் என்று லோட்டஸ் பாண்டில் உள்ள தன் இருப்பிடத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முக்கிய தலைவர்களோடு உரையாடிய போது குறிப்பிட்டார் ஷர்மிளா.

தெலங்காணாவில் ராஜன்னா ராஜ்யம் எடுத்து வருவேன் என்பது தான் ஷர்மிளாவின் இப்போதைய முழக்கமாக இருக்கிறது.

லோட்டஸ் பாண்டில் உள்ள தன் இருப்பிடத்தில் ஏற்பாடு செய்த அன்பர்களின் கூட்டத்தில் பங்குபெற்ற முக்கிய தலைவர்களோடு உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அவர், தெலுங்கானாவில் ராஜன்னா அரசாங்கம் இல்லை என்றும் ராஜன்னா ராஜ்ஜியம் ஏன் வரக்கூடாது என்றும் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

தெலங்காணாவில் ஒய்எஸ் ராஜசேகர்ரெட்டி இல்லாத குறை இருக்கிறது என்று தெரிவித்தார். ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி ஆசைப்பட்ட அரசாங்கத்தை எடுத்து வருவோம் என்றார். நேற்று நல்கொண்டா மாவட்டத்தின் தலைவர்களோடு பேசினேன் என்றும் மீதி உள்ள மாவட்ட தலைவர்களுடனும் பேசப் போகிறேன் என்றும் கூறினார். மாநில அளவில் நிலைமையை அறிந்து கொள்வதற்கு இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார்.

விரைவிலேயே அனைத்து விவரங்களையும் வெளியிடப் போவதாகவும் கூறினாரா. ஷர்மிளா தன் இல்லத்தில் ஏற்பாடு செய்த மேடையிலிருந்து ஆதரவாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஆதரவாளர்கள் ஷர்மிளா மீது காகிதப்பூக்களை மழைபோல் பொழிந்தார்கள். வெடிகள் வெடித்து ஷர்மிளாவின் கூட்டத்தை கொண்டாடினார்கள்.

ஷர்மிளாவின் கணவர் பிரதர் அனில் கிறிஸ்துவ மத பிரசாரகராக உள்ளார். ஏற்கெனவே ஆந்திராவில் கிறிஸ்துவ மத பிரசாரத்துக்காக அரசின் பணம் பல வகைகளில் வீணடிக்கப் பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்களும் கிறிஸ்துவர்களின் பின்னணியும் ஆந்திராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெகனின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிறிஸ்துவராக மாறி, திருமலை திருப்பதியில் ஏழுமலையின் ஒரு பகுதியை கிறிஸ்துவத்துக்கு தாரை வார்க்க முயற்சி செய்து, அதே சப்தகிரி மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்தார்.

இந்நிலையில், ஜெகன் மூலம் ஆந்திரத்தைப் பிடித்து விட்ட கிறிஸ்துவ மிஷனரிகள் தெலங்காணாவையும் கபளீகரம் செய்ய கண் வைத்துள்ளதாகவே ஷர்மிளாவின் இந்த முயற்சியை பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version