பிப்ரவரி 25, 2021, 12:53 மணி வியாழக்கிழமை
More

  அதிகாலையில் அசால்டா உணவகம் வந்த அரிமா! அரிய வைரல் வீடியோ!

  Home சற்றுமுன் அதிகாலையில் அசால்டா உணவகம் வந்த அரிமா! அரிய வைரல் வீடியோ!

  அதிகாலையில் அசால்டா உணவகம் வந்த அரிமா! அரிய வைரல் வீடியோ!

  lion
  lion

  காட்டிற்குள் இருந்த சிங்கம் ஒன்று வழிதவறி ஹோட்டல் ஒன்றுக்குள் புகுந்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனகத் நகரில் கட்டப்பட்ட புதிய ஹோட்டல் ஒன்றுக்குள் சிங்கம் ஒன்று புகுந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை விடியற்காலை 5 மணியளவில் சிங்கம் ஒன்று சாலையை கடந்து ஹோட்டலுக்குள் வருவதை வாசலில் காவல் இருந்த காவலாளி பார்த்துள்ளார்.

  உடனே தனது கண்ணாடி அறைக்குள் பதுங்கிக்கொண்ட அவர் ஹோட்டலில் உள்ள மற்றவர்களுக்கும் போன் செய்து விவரத்தை கூறியுள்ளார். இதனால் அனைவரும் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டதை அடுத்து, அந்த சிங்கம் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் விடுதி வளாகங்களில் சுற்றித்திரிந்த பின் மீண்டும் வெளியே சென்றுள்ளது.

  இந்த காட்சிகள் அனைத்தும் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari