பிப்ரவரி 25, 2021, 1:23 மணி வியாழக்கிழமை
More

  கனடாவிலிருந்து இந்தியா வரும் அன்னபூரணி சிலை!

  Home சற்றுமுன் கனடாவிலிருந்து இந்தியா வரும் அன்னபூரணி சிலை!

  கனடாவிலிருந்து இந்தியா வரும் அன்னபூரணி சிலை!

  anapoorni-1
  anapoorni-1

  கனடாவில் உள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் மெக்கென்சி கலைக்கூடத்தில் பெண் கடவுளின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இச்சிலை இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டிருக்கலாம் என அந்த கலைக்கூடத்தை பார்வையிட்ட திவ்யா மெஹ்ரா என்ற கலைஞர் கடந்த ஆண்டு சந்தேகம் எழுப்பினார்.

  அச்சிலை வாரணாசியின் ராணியும் உணவுக் கடவுளுமான அன்னபூரணி என கண்டுபிடிக்கப்பட்டது.

  இதையடுத்து அச்சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க ரெஜினா பல்கலைக்கழகம் தாமாக முன்வந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் தாமஸ் சேஸ் கடந்த நவம்பரில் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவிடம் இச்சிலையை ஒப்படைத்தார்.

  இந்நிலையில் இச்சிலையை இந்தியா கொண்டுவரும் நடைமுறைகளை கலாச்சாரத் துறை விரைவுபடுத்தி வருகிறது.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari