Home அடடே... அப்படியா? தமிழ் மாத முதல் சனிக்கிழமை வழிபாடு: ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்

தமிழ் மாத முதல் சனிக்கிழமை வழிபாடு: ஆஞ்சநேயருக்கு காய்கறி அலங்காரம்

vegetable-alankaram-for-anjaneyar1
vegetable-alankaram-for-anjaneyar1


காரமடை அருகேயுள்ள  மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் மாசி மாத முதல் சனிக்கிழமை நாளை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு  செய்யப்பட்டது.

மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி திருக்கோயில் உள்ளது. நாடி வரும் பக்தர்களின் துயர் தீர்த்து ஜெய மங்களங்கள் வழங்குவதால் மூலவர்  ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் என்னும் திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இத்திருத்தலத்தில் மாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு மாதம் மும்மாரி பொழிந்து மக்கள் நல்வாழ்வு வாழவும், விவசாயம் செழித்து விவசாயிகளின் வாழ்வு ஏற்றம் பெறவும் மூலவர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு  36 வகையான காய்கறியை கொண்டு  அலங்காரம் செய்யப்பட்டது.

vegetable-alankaram-for-anjaneyar

மூலவர் காய்கறி  அலங்காரத்தில் பக்தர்களுக்கு திருக்காட்சியளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவினர்  செய்திருந்தனர்.

  • தகவல்: SVP சரண்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version