பிப்ரவரி 25, 2021, 4:13 காலை வியாழக்கிழமை
More

  தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்த போலிஸ்!

  Home சற்றுமுன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்த போலிஸ்!

  தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணிடம் தவறாக நடந்த போலிஸ்!

  vankodumar

  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளம் யுவதி ஒருவருடன் தவறாக நடக்க முற்பட்ட போலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

  இந்த சம்பவம் கண்டி தலத்து ஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டை சோதனையிடவேண்டுமெனத் தெரிவித்து யுவதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்குள் நுழைந்த போலிஸ் உத்தியோகத்தர் அங்கு யுவதியுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளார்.

  அந்த யுவதி சம்பவம் தொடர்பில் தனது உறவினர்களிடம் முறையிட்டதை அடுத்து, அவர்கள் அதை உயர் போலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து, அந்த போலிஸ் உத்தியோகத்தர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  போலிஸ் உத்தியோகத்தரை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதுடன், அவர் கைது செய்யப்படுவார் என்றும், அவர் மீது முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கண்டி பிரிவின் உயர போலிஸ் அதிகாரி சுதாத் மாசிங்கா தெரிவித்துள்ளார்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari