பிப்ரவரி 25, 2021, 4:26 காலை வியாழக்கிழமை
More

  நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தமீம் அன்சாரி கைது!

  Home சற்றுமுன் நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தமீம் அன்சாரி கைது!

  நடிகை வாணிஸ்ரீயின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த தமீம் அன்சாரி கைது!

  thamim-ansari-1
  thamim-ansari-1

  பழம்பெரும் திரைப்பட நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகையாக இருக்கும்போதே வாணி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

  இந்த நிறுவனத்துக்காக சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் 1970-ல் வாங்கப்பட்டுள்ளது. இதை சிலர் அபகரித்துவிட்டதாக நடிகை வாணிஸ்ரீ தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

  vanisri

  இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
  அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ராஜாபால் தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அமைந்தகரை, ஆசாத் நகரை சேர்ந்த தமீம் அன்சாரி (43) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம