Home கிரைம் நியூஸ் நிற்காமல் சென்ற வேன்.. துரத்திப் பிடித்த போலீஸ்! தர்பூசணிக்குள் மறைத்து கடத்திய பொருளால் அதிர்ச்சி!

நிற்காமல் சென்ற வேன்.. துரத்திப் பிடித்த போலீஸ்! தர்பூசணிக்குள் மறைத்து கடத்திய பொருளால் அதிர்ச்சி!

Sheep-smuggling-1
Sheep smuggling 1

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சென்னை நோக்கி ஆந்திராவில் இருந்து வந்த ஒரு மினி வேனை போலீசார் நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அந்த வேன் அங்கு நிற்காமல் சோதனைச்சாவடியின் தடுப்புகளை உடைத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதனால் போலீசார் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் அந்த வேனை துரத்தி சென்றுள்ளனர்.

இதனை பார்த்த கடத்தல்காரர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைபேட்டை பகுதியில் சாலையோரம் உள்ள வயல்வெளியில் அந்த வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து அந்த வேனை போலீசார் சோதனை செய்தபோது, அதில் தர்பூசணி பழங்களுக்கு அடியில் சுமார் ஒரு டன் எடை கொண்ட 26 செம்மரக்கட்டைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பின் கும்மிடிபூண்டி வனசரகர் சுரேஷ் பாபுவிடம் செம்மரக்கட்டைகளுடன் பிடிபட்ட அந்த அவனை போலீசார் ஒப்படைத்து விட்டனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வனத்துறை அதிகாரிகள் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version