Home அடடே... அப்படியா? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 4 கோபுர வாசல் வழியாகவும் பக்தர்களுக்கு அனுமதி!

meenakshi kovil
meenakshi kovil

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுர வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி – கோவில் உள் வளாகத்தில் பக்தர்கள் அமர தடைவிதிக்கப் பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்படுகளுடன் வழிபாட்டு தளங்களுக்கு பொதுமக்கள் செல்ல அரசு உத்தரவிட்டிருந்த கடைபிடிக்கபட்டு வந்த நிலையில்,தற்போது , தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்தும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து,  மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று முதல் அனைத்து வயதினையுடைய பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நாளை முதல் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சுவாமி தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு, தெற்கு, மேற்கு, மற்றும் வடக்கு நான்கு கோபுரங்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்

அதன்படி பக்தர்கள் வழிபாட்டிற்காக நாளை முதல் காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

meenakshi 2

மேலும் ,கட்டாயம் பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் திருக்கோயிலுக்கு வரும் சமயம் தங்களுடைய  கைபேசி, கேமரா உள்ளிட்டவைகளை திருக்கோயிலுக்குள் கொண்டு வர அனுமதியில்லை, பக்தர்கள் திருக்கோயிலுக்குள் பூ , மாலை கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது . 

பக்தர்கள் மற்றும் பொது மக்கள் திருக்கோயிலுக்குள் அம்மன் சன்னதி கிழக்கு வாயிலுக்குள் நுழைந்து அஷ்டசக்தி மண்டபம் , மீனாட்சி நாயக்கர் மண்டபம் , இருட்டு மண்டபம் , பொற்றாமரைக்குள கிழக்குப் பகுதி , தெற்குப்பகுதி மற்றும் கிளிக்கூடு மண்டபம் , கொடிமரம் வழியாக அம்மன் சன்னதிக்குள் உள்ளே நுழைந்து தரிசனம் செய்துவிட்டு,பின் சுவாமி சன்னதி சென்று தரிசனம் செய்து சனீஸ்வரர் சன்னதி , அக்னி வீரபத்திரர் , அகோர வீரபத்திரர் , பத்திரகாளி அருகில் உள்ள வழியில் வெளியில் வந்து பழைய திருக்கல்யாண மண்டபம் வழியாக அம்மன் சன்னதி கிழக்கு வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்

meenakshi 1

குறிப்பாக பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலில் எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது.

பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும் , கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்  எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version