Home கல்வி தங்கையின் படிப்பிற்காக உதவி கேட்டு முதல்வருக்கு ட்விட் போட்ட இளைஞர்! உடனடியாக கிடைத்த பலன்!

தங்கையின் படிப்பிற்காக உதவி கேட்டு முதல்வருக்கு ட்விட் போட்ட இளைஞர்! உடனடியாக கிடைத்த பலன்!

cm 1
cm 1

தங்கையின் கல்விக்காக முதலமைச்சரிடம் உதவி கேட்ட ஹரி என்பவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

திருப்பூரைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான ஹரி என்பவர் ‘வாத்தி ரெய்டு’ என்னும் பெயரில் டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அந்த டுவிட்டர் பதிவில், ‘ஐயா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கச்சி திருப்பூர்ல தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்னைக்கு அரையாண்டு தேர்வு. கடந்த ஆண்டில் இருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனால் பள்ளியில் இருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை.

தங்கைக்கு பாடமும் நடத்தப்படவில்லை. தேர்வு லிங்கையும் அனுப்பவில்லை. இதனால், இன்று தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள். அரசு பள்ளியில் சேர்க்கலாம்னு பார்த்தால் கட்டணம் செலுத்தாமல் TC தர மாட்டிங்கராங்க.. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும், ஐயா’ எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஹரியின் இந்த டுவிட்டர் பதிவிற்கு திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பதிலளித்ததுடன், நடவடிக்கையும் எடுத்துள்ளார். அவரது கோரிக்கை டுவிட்டை குறிப்பிட்டு, மாணவிக்கு தேர்வுக்கான லிங்க் கிடைத்து விட்டது, என ஆட்சியர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஹரி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும், திருப்பூர் ஆட்சியருக்கு நெட்டிசன்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version