பிப்ரவரி 25, 2021, 4:22 காலை வியாழக்கிழமை
More

  மத்திய பிரதேச கால்வாய் விபத்து: 2 உயிரை விரைந்து காப்பாற்றிய பெண்! குவியும் பாராட்டு!

  Home சற்றுமுன் மத்திய பிரதேச கால்வாய் விபத்து: 2 உயிரை விரைந்து காப்பாற்றிய பெண்! குவியும் பாராட்டு!

  மத்திய பிரதேச கால்வாய் விபத்து: 2 உயிரை விரைந்து காப்பாற்றிய பெண்! குவியும் பாராட்டு!

  mp-3
  mp-3

  மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

  பேருந்து கவிழ்ந்து கால்வாயில் கவிழ்ந்தபோது வேகமாக செயல்பட்டு பெண்ணொருவர் இருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண் ஷிவ்ரானி, தந்து தம்பியின் உதவியுடன் கால்வாயில் குதித்து இரண்டு பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணைந்து மொத்தம் ஏழு பேர் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

  Shivrani
  Shivrani

  இதில் அனைவருமே 16 முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள் என்று கூறப்படுகின்றது. ஷிவ்ரானியின் இந்த துணிச்சலை பாராட்டி மாவட்ட கலெக்டர் நந்தகுமார் சவுத்ரி கூறுகையில், “இந்த பெண்ணின் தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.

  உங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தில் இருந்து உயிரை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்த மாநிலமே உங்களால் பெருமை அடைகிறது” என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பெண்மணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.