Home சற்றுமுன் மச்சம் சொல்லும் வாழ்வின் மிச்சம்: அறிவோமா?

மச்சம் சொல்லும் வாழ்வின் மிச்சம்: அறிவோமா?

Mole-1
Mole 1

மச்சம் அழுத்தமான கறுப்பு நிறத்தில் இருந்தால், வாழ்க்கை எப்போதுமே உன்னத நிலையில் இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் பிறக்கும்போதே நிம்மதியான சூழ்நிலையில் பிறப்பார்கள்.

கறுப்பு நிறம் ஆழ்ந்தில்லாமல் சற்று லேசாக இருந்தால், சிறிது அமைதியற்ற நிலையில் வாழ்க்கை கழியும். வருமானம் நிரந்தரமாக இராது.

மச்சம் சாம்பல் நிறமாக இருப்பின், ஏதாவது ஒரு கலையில் நல்ல திறமை பெற்றுத் திகழ்வார்கள். வருமானம் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் நிச்சயமான நிரந்தரமான வருமானம் இருக்கும்.

பழுப்பு நிற மச்சமாக இருந்தால், இவர்களின் வாழ்க்கை இரும்பு, மரம் போன்ற பொருட்களோடு ஒட்டியதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தால், மகான்களாக, கல்விமானாக, விஞ்ஞானியாகப் புகழ்பெறுவார்கள்.

வெண்மை நிற மச்சம் இருப்பின் பலசாலிகளாகவும், துணிச்சல் மிக்கவராகவும், வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுபவர்களாகவும் இருப்பார்கள்.

சற்று நீல நிறமான மச்சத்தைப் பெற்றோர், பழைமை விரும்பிகளாக இருப்பார்கள். வணிகத்துறையில் ஆர்வம் இருக்கும்.

குங்கும நிறமாக மச்சம் அமைந்திருந்தால், இவர்கள் உல்லாசப் பிரியர்கள். தந்திரமான நுண்ணறிவுடன் திகழ்வர். மஞ்சள் நிறமாக அமைந்திருக்குமானால் மிகவும் கலகலப்பான இயல்பு கொண்டவர்களாக, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவார்கள்.

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள்.

மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள்.

தலை பகுதியில் மச்சம் உள்ள பெண்கள்
தலையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பேராசை மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நெற்றி மச்சம்
நெற்றியில் மச்சம் அமைவது விசேஷமான நிலை. ஞானத்துக்கான அம்சம். விருப்பம்போல் வாழ்க்கை அமையும். கணவனின்/மனைவியின் அன்பு வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

வளரும்…..

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version