Home அடடே... அப்படியா? வடிவேலு 23ஆம் புலிகேசின்னா… ஸ்டாலின் 24ஆம் புலிகேசி: செல்லூர் ராஜூ கலகல..!

வடிவேலு 23ஆம் புலிகேசின்னா… ஸ்டாலின் 24ஆம் புலிகேசி: செல்லூர் ராஜூ கலகல..!

sellur-raju
sellur raju

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால்  பொது வாழ்க்கையிலிருந்து  விலகிக்கொள்ள  தயார் என்று மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது குறிப்பிட்டார்.-ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

மதுரை சோலை அழகுபுரத்தில் அரசு சார்பில்  644 பயனாளிகளுக்கு 2 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான தாலிக்குதங்கம்,வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட அரசுத் திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய  தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விழா மேடையில் பேசினார்…


அப்போது… மதுரையில் கருணாநிதி சிலை அமைக்க அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். நாங்கள் முட்டுக்கட்டை போட்டு இருந்தால் மதுரையின் மைய பகுதியில் சிலை வைக்க அனுமதி கொடுத்து இருப்போமா? எங்கோ ஒரு கடைக்கோடி மூலையில் அமைக்க தான் அனுமதி கொடுத்திருப்போம்

செல்லும் இடங்களிலெல்லாம் விளம்பரத்திற்காக பொய் பேசிக் கொண்டே இருக்கிறார் ஸ்டாலின். அமைச்சர்களை கேலி பேசுவதாக நினைத்து ஸ்டாலின் அவராகவே கேலி கிண்டலுக்கு ஆளாகி கொண்டிருக்கிறார். உலகத்தில் எந்த நாட்டிலும் இண்டர்நெட் இலவசமாக கொடுத்ததில்லை. அதிமுக அரசு மாணவர்களுக்கு இலவச டேடா கார்டு வழங்கியுள்ளது.

எதிர்க் கட்சியை மதிக்காமல் எதிர்க்கட்சிகளை அரசியல் செய்ய விடாமல் தடுப்பவர்கள் திமுகவினர். மு.க.ஸ்டாலின் மக்களிடம்  மனுவை பெற்று 100 நாட்களில் கோரிக்கை நிறைவேற்றுவதாக கூறி மக்களை ஏமாற்றுகிறார். ஆட்சிக்கு வரும் முன்னரே மனுவை வாங்கி மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின்.

வடிவேல் 23ம் புலிகேசி என்றால் ஸ்டாலின் 24வது புலிகேசியாக உள்ளார். கேட்பவர்கள் ஏமாளியாக இருந்தால் எருமை ஏரோ பிளான் ஓட்டுமாம்,அதுபோல மக்கள் நேரே தனது முதல்வர் அலுவலகத்திற்கு வரலாம் என ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்!

நான் மறைந்தாலும்  கூட நான் செய்த திட்டங்கள் மதுரையில் நிலைத்திருக்கும்  அதை மு.க.ஸ்டாலின் மறைக்க முடியாது! படிக்கவே தெரியாத முக.ஸ்டாலின் எப்படி முதல்வராக முடியும்!  

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் 
அதிமுக அரசை பாராட்டவில்லை என்றாலும் கூட கேலி கிண்டல் செய்ய வேண்டாம். மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் செய்து திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறது என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் செய்ததாக முக.ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு  பதில் அளித்தார்… ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடுகு அளவு கூட ஊழல் நடைபெறவில்லை! ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நான் ஊழல் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நான்  பொது வாழ்க்கையிலிருந்து  விலகிக்கொள்ள  தயார்
முக.ஸ்டாலின் தொடர்ந்து  உலருவதை நிறுத்த வேண்டும்

மதுரை எய்ம்ஸ் அமைக்க மட்டும் ஏன் ஜப்பான் நிதி நிறுவனத்தில் கடன் பெறப்படுகிறது என்ற கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்த போது…

தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில்  மருத்துவ கட்டமைப்பு வசதி குறைவாக உள்ளதால் அங்கு எய்ம்ஸ் அமைக்க மத்திய அரசு அங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது! தமிழகத்தில் மருத்துவ வசதிகள் அதிகளவில் உள்ளதால் பன்னாட்டு  கடன் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அதி விரைவில் பணிகள் துவங்க உள்ளது

பிரதமர் துவங்கி வைத்த திட்டம் எப்படி நடைபெறாமல் இருக்கும்? மதுரை எய்ம்ஸ் குறித்து எதிர்க்கட்சிகள் தவறான தகவலை தெரிவித்து வருகிறார்கள்.. என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version