Home அடடே... அப்படியா? நாங்க அறிவிக்கவே இல்லை! கலைமாமணி விருது பட்டியலால் அதிர்ச்சியில் அரசு!

நாங்க அறிவிக்கவே இல்லை! கலைமாமணி விருது பட்டியலால் அதிர்ச்சியில் அரசு!

kalimamani-award-1
kalimamani award 1

தமிழக அரசின் கலைமாமணி விருது பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதிப்பவர்களுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் கலைமாமணி விருதுகளை அறிவிக்கும். இதற்கான பட்டியலை இயல் இசை நாடக மன்றம்தான் அரசுக்கு பரிந்துரைக்கும்.

இந்நிலையில் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெற்றவர்களின் பட்டியல் என்ற ஒன்று ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியானது. ஆனால் அந்த பட்டியலை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லையாம்.

அரசு வெளியிடும் முன்னரே யாரோ சிலர் அதை வாட்ஸ் ஆப்பில் பரப்ப, செய்தி ஊடகம் வரை செல்ல அது இப்போது இணையத்திலும் வைரலாகியுள்ளது.

இது தெரியாமல் பட்டியலில் உள்ள கலைஞர்களுக்கு நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version