ஏப்ரல் 18, 2021, 11:19 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  அரசு தேர்வில் எதையாவது எழுதுங்கள் மார்க் போடுவாங்க! மாணவர்களுக்கு கல்வித்துறை இயக்குனர் அதிர்ச்சி அட்வைஸ்!

  school-exam
  school-exam

  அரசுத் தேர்வில் கேள்விக்கு பதில் தெரியவில்லை என்றால், எதையாவது எழுதி விடுங்கள் என்று உதித்ராய் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  உதித் ராய் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மாணவர்களிடையே அரசு தேர்வு எழுதும்போது கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பதற்காக அந்த கேள்வியை அப்படியே விட்டு விடாதீர்கள். எதையாவது எழுதி வையுங்கள். உங்களின் தேர்வுத் தாளில் எதையாவது எழுதி இருந்தால் நிச்சயம் மதிப்பெண் வழங்கப்படும். முடிந்தால் கேள்வியை கூட அப்படியே எழுதி வையுங்கள் என்று கூறியுள்ளார்.

  பதில் எழுதும் தாளில் ஏதாவது மாணவர்கள் எழுதி இருந்தால் மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சிபிஎஸ்சி வாரியத்திடம் இதைக்குறித்து பேசியுள்ளோம். தேர்வில் மாணவர்கள் ஏதாவது எழுதியிருந்தால் மதிப்பெண்கள் வழங்குங்கள் என்று, கூறும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த வீடியோவைப் பார்த்து அனைத்து இந்திய பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர் அசோக் அகர்வால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  அதில், கல்வித்துறை இயக்குநர் பேசிய வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அரசுத் தேர்வில் பதில் எழுதும் தாளில் எதையாவது எழுதிவையுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதே. பதில் எழுதும் தாளில் ஏதாவது எழுதியிருந்தால்கூட மதிப்பெண் தரக்கூறி சிபிஎஸ்இ அமைப்பிடமும் பேசியுள்ளதாக ராய் தெரிவித்துள்ளார்.

  இது போன்ற அதிகாரி கல்வித்துறையை தரம் தாழ்த்துகிறார். தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »