Home உள்ளூர் செய்திகள் கான்க்ரீட் வீடு கட்டி தரப்படும்: முதல்வர்!

கான்க்ரீட் வீடு கட்டி தரப்படும்: முதல்வர்!

cm-1
cm 1

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு என பலக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

திமுக தலைவர், ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சயின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றிய அதிமுக 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி, ஹாட்ரிக் சாதனை படைக்க தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.

இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிச்சாமி, அதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் வரும் தேர்தலில் வெற்றியை தக்கவைக்க தீவிரமாக செயல்பட்டு வரும் அதிமுக சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களாக மக்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என்றும், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு, அரசு சார்பில் நிலம் வாங்கி, இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார். விழுப்புரத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசிய அவர் ‘தமிழகத்திலே அதிமுக அரசு முதன் முறையாக கடல் நீரை குடிநீராக்கி கிராமப்புறங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

கிராமப்புறத்தில் உள்ள மக்களுக்கும் நகர மக்களுக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கிய அதிமுக அரசு, ஒரே நேரத்தில் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்த கொண்டு வந்துள்ளது. மேலும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் நிலம் வாங்கி இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும், தமிழகத்தில் வீடு இல்லாதவர்கள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்’ என உறுதியளித்தார்.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ், விவசாய கடன்கள் தள்ளுபடி, அரசு ஊழியர்கள் மீதான வழக்குகள் வாபஸ், அரசு ஊழியர்கள் வீடுகட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் 40 லட்சமாக உயர்வு என தமிழக அரசு மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டுளளது குறிப்பிடத்தகக்து.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version