பிப்ரவரி 25, 2021, 2:06 மணி வியாழக்கிழமை
More

  ஆபாசப் படம் பார்த்து ஆபத்தில் சிக்கிய விஐபிகள்!

  Home சற்றுமுன் ஆபாசப் படம் பார்த்து ஆபத்தில் சிக்கிய விஐபிகள்!

  ஆபாசப் படம் பார்த்து ஆபத்தில் சிக்கிய விஐபிகள்!

  Pornography-1
  Pornography-1

  ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு புதிய ஆப் மூலம் ஆபாச படத்தை பல வி. ஐ. பி.க்களை பார்க்க வைத்து, அவர்களின் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து ,அதை நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எடிட் செய்து பணம் பறித்துள்ளார்கள் .

  மும்பையின் குற்றப்பிரிவு போலீசாருக்கு சமீபத்தில் ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு கூட்டம் இங்கிருக்கும் பல எம் .எல். ஏ. க்கள், மற்றும் எம் .பி. க்கள் மற்றும் பல முக்கிய புள்ளிகளைக் குறி வைத்து, ஆபாச படம் மூலம் பணம் பறிப்பதாக தகவல் கிடைத்தது.

  அந்த தகவலின் அடிப்படையில் அவர்களை பிடிக்க ஒரு போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த படையினர் ரகசியமாக செயல்பட்டு அந்த கூட்டத்தை சேர்ந்த மூவரை கைது செய்தார்கள். அப்போது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.

  அந்த கூட்டம் முதலில் சமூக ஊடகத்தில் பல பெண்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கியுள்ளார்கள். பின்னர் அந்த பெண்களின் போலியான நம்பரிலிருந்து பல அரசியல் புள்ளிகளுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து, அதில் ஆபாச படங்களை வெளியிட்டு அவர்களை பார்க்க வைத்துள்ளார்கள். அப்போது படம் பார்க்கும் அவர்களின் முக பாவனைகளை பதிவு செய்து விடுகின்றனர். பின்னர் ஆபாச படத்தில் இருக்கும் வீடியோவில் அவர்கள் இருப்பது போல எடிட் செய்து விடுகின்றனர். அப்படி போலியாக தயாரிக்கப்பட்ட அந்த ஆபாச வீடியோவை அந்த அரசியல் புள்ளிகளுக்கு அனுப்பி, அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் கேட்ப்தை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

  cellphone speech

  இப்படி அவர்களின் வீசிய வலையில் பல எம் .எல்.ஏ. க்கள், மற்றும் எம் .பி. க்கள் சிக்கி பணத்தை இழந்துள்ளார்கள். இந்த கூட்டம் மேலும் அதிக பணம் கறக்க மிரட்டலில் ஈடுப்பட்டதால் இப்போது போலீசில் சிக்கியுள்ளார்கள்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari