Home இந்தியா சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள்: மத்திய அரசு!

சமூக ஊடகங்களுக்கு விதிமுறைகள்: மத்திய அரசு!

போலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்கு முறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.

அதில் கூறிய முக்கிய விஷயங்கள்
சில விதிகளில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் பல்வேறு அமைச்சகங்களை உள்ளடக்கிய கடுமையான மேற்பார்வை நடவடிக்கைகளை உள்ளடக்கியது. மேலும், இந்த தளங்கள் “இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும்” பாதிக்கும் வகையிலும், தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை, பதிவுகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.
இந்த கட்டுபாடுகளில் கீழ்கண்ட முக்கிய அம்சங்கள் அடங்கும்

1) வயது மற்றும் பிரிவுகள் அடிப்படையிலான கட்டுப்பாடு

2) சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான 3 அடுக்கு வழிமுறைகள்

3) சட்ட நிறுவனத்திற்காக தொடர்பு கொள்ளும் அதிகாரி

4) சர்சைக்குரிய உள்ளடக்கம் அல்லது பதிவுகளை அம்பலப்படுத்தும் நடவடிக்கை

5) விரைவான பயனர்கள் கணக்கு சரிபார்ப்பு வழிமுறை

மேலும், எங்கள் அரசு அத்தனை கேள்விகளையும், ஆலோசனைகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் அவதூறுகளைப் பரப்பும் வதந்திகளை பரப்பவும் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதை நிச்சயம் ஏற்க முடியாது என ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

பெண்கள் குறித்த ஆபாசமான புகைப்படங்கள் தகவல்கள் இருந்தால் புகார் அளிக்கப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும் என சமூக வளைதள நிறுனங்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறை விதித்துள்ளது.

சட்டவிரோதம் அல்லது ஆட்சேபனைக்குரிய விஷயங்களை, புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும்.

விதிமுறை மீறல் தொடர்பாக பொதுமக்களின் புகார்களை பெறவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும். இதன் மீது 15 நாளில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் நீதிமன்றங்கள் தகவல் கேட்டால் 15 நாளில் சமூக வலைதளங்கள் கட்டாயம் வழங்க வேண்டும். வழங்காவிடில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஒருவரின் கணக்கை நீக்கினால், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

ஓடிடி தளங்கள் 13+, 16+, வயது வந்தவர்களுக்கு மட்டும் என படங்களை வகைப்படுத்த வேண்டும்.

தவறான தகவலை பரப்பும் முதல் நபர் யார் என்பதை சமூக வலைதள நிறுவனங்கள் கண்டறிய வேண்டும்.

புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் மாதமொருமுறை எவ்வளவு புகார்கள் வருகிறது என்பது சம்பந்தமான விரிவான தகவல்களை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version