பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளுக்கு முன் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட கேலிக்கூத்து எதுவும் இருக்க முடியாது என்றும் இது சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல் ஆகும் என்றும் சாடி உள்ளார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தகுதித் தேர்வு மதிப் பெண்கள் அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து சமூக நீதியை நிலை நிறுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும் என்றும் அதில் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari