Home இந்தியா 2 நாட்களே உள்ளன! ஓய்வூதியம் பெறுவோர் இதை செய்யத் தவறினால்…

2 நாட்களே உள்ளன! ஓய்வூதியம் பெறுவோர் இதை செய்யத் தவறினால்…

pension

ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் அவர்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் தங்களுடைய ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதன் பின்னர், 2021 பிப்ரவரி 28 வரை சமர்ப்பிக்கலாம் என்றும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இது பென்ஷன் வாங்குபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பென்ஷன் கிடைக்காது.

மேலும் பென்ஷன் வாங்குபவர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம் அல்லது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் செய்யலாம். ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரர் ஆதார் நம்பர், செல்போன் நம்பர் இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக:

முதலில் ஜீவன் பிரமான் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இதில் new registration என்பதில் சென்று ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு நம்பர், பெயர், செல்போன் நம்பர், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

இதையடுத்து “Send OTP” என்பதை கிளிக் செய்தால் செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். பின்னர் ஜீவன் பிரமான் செயலியில் OTP எண் மூலம் login செய்ய வேண்டும்.

இதையடுத்து “Generate Jeevan Pramaan” என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் நம்பர், செல்போன் நம்பர் ஆகியவற்றை பதிவிடவும். பிறகு “generate OTP” என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிடவும்.

PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். ஆதார் விவரங்களை வைத்து கை ரேகையை ஸ்கேன் செய்தால் ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். ஆயுள் சான்றிதழ் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி மொபைல் எண்ணுக்கு SMS ஆக வரும்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version